மண்
மண் என்பது இயற்கையாலான மணியுருவான பொருளாகும்.மண் பஞ்சமகா பூதத்தில் ஒன்றாகும்.அதாவது ஐம்புலன்களில் ஐந்து வகையாக உணர்வது பஞ்சமகாபூதம் என்று கூறப்படுகின்றது. “பார்த்திவ’மகாபூதம் என்று ஆயுர்வேதத்தில்கூறப்பட்டிருக்கின்றது. பார்த்திவஅல்லது மண்சக்தி நம் உடலில் முக்கியமான பங்கு வகிக்கிறது. மண்ணுக்கு வடிவம் மாற்றவும் உருவாக்கவும் சக்தி உண்டு. அதேபோன்றுதோல், மலம், தலைமுடி, எலும்புபோன்றவைகளில் மண்சக்தி முக்கியபங்கு வகிக்கிறது. “சிக்கதம் மற்றும்வாலுகம்’ என்ற மற்ற பெயரும் உண்டு.
மண் வகைகள்
ஆச்சரியர் சுசுருதர் “பூமிப்ரவியாகியஅத்தியாயம்’ என்று இதை குறிப்பிட்டுள்ளார். பஞ்சபூதங்களின் அடிப்படையில் நிலங்கள் ஐந்து வகையாகப்பிரிக்கப்படுகின்றன.
- பார்த்திவ குணம்
- ஆப் குணம்
- தேஜ் குணம்
- வாயு குணம்
- ஆகாய குணம்
பார்த்திவ குணம்
இந்த மண் கற்கள் நிறைந்தனவாகவும், திடமாகவும், கனமாகவும்,கருநீலமாகவும் அல்லது கருமைநிறமாகவும் இருக்கும். இந்த மண்ணில்விளையும் மரங்கள் பெரிய மர ங்களாககாணப்படும்.
ஆப் மண்
நீர் நிலைகளின் அருகில் காணப்படும். இது குளிர்ந்த தன்மை உடையனதாகவும், வெண்மை நிறம்மிகுதியாகவும் காணப்படும். எண்ணைபிசுபிசுப்புத் தன்மை கொண்டுள்ளது.இம்மண்ணில் புற்கள் மிகுதியாகவும்மென்மை மிகுந்த தாவர ங்களும்காணப்படும்.
தேஜ் மண்
பல வர்ணங்களைக் கொண்ட சிறிய லேசான கற்கள் நிறைந்தவையாகக்காணப்படும். இங்குள்ள தாவரங்கள்சிறியதாகவும், வெளிர் நிறமாகவும் காணப்படும்.
ஆகாய மண்
கருப்பு நிறம் கொண்டதாகவும்,மெலிந்த மரங்கள் மற்றும் கொடிகள்,மிருதுவாகவும் பெரிய மலைகள்கொண்டதாகவும் காணப்படும்.
வாயு மண்
வறட்சி மிகுந்த மண்ணாக காணப்படும். மிக மிருதுவாகவும், கழுதைநிறம் போன்று இம்மண் காணப்படும்.
பஞ்சமிரித்திகா
பஞ்சமிரித்திகா என்பது மண் வகைகள் ஆகும்.
இஷ்டிகா சூரணம், பஸ்பம், வல்மிக மிருத்திகா, கைரிகம், இலவனம்
விருக்ஷ ஆயுர்வேதத்தில் நிலங்களை மூன்று வகையாக பிரிக்கின்றனர்.
சாதாரண நிலம், ஆணுப நிலம், ஜாங்கல நிலம்.
சாதாரண நிலம்
இதில் போதுமான தண்ணீர் தாவரங்கள் மற்றும் மண் வகைகள் உண்டு. பீஜபூரகம், புன்னாகம், சம்பக்கம், ஆம்பரம், அதிமுக்தம், பிரியங்கம்,தாடிமா போன்ற ஆயுர்வேத மூலிகைகள் அதிகமாகக் காணப்படும்.
ஆணுப நிலம்
இந்நிலத்தில் உற்பத்தி செய்ய உதவுகிறது. இயற்கையாகவே அதிவேகமான நீர்நிலைகளும் காணப்படும்.விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமாககாணப்படுகிறது. பானசம், லக்குசம், தாளம், மூங்கில், எலுமிச்சை, திலகம்,பேரிச்சை பழம், வாழைப்பழம், மாமரம், தென்னை மரம் போன்ற மூலிகைகள் இங்கு இருக்கும்.
ஜாங்கல நிலம்
இந்நிலத்தில் வளர்ச்சிமிகுந்த நிலமாகக் காணப்படும். இங்கு தண்ணீர்மிகக் குறைவாகவே காணப்படும். திரிபலம், வேப்பமரம், கேசரம், கருநுங்கு போன்றவை இங்கு உண்டு.

விருக்ஷ ஆயுர்வேதத்தில் மண் பதப்படுத்துதல் முறை
- குணப்ப ஜலம் என்ற எளியவகையான முறை கூறப்பட்டுள்ளது.அதாவது இறைச்சி, தண்ணீர்மற்றும் பால் சேர்த்து நிலத்தடியில் சிறிது காலம் இருக்க வேண்டும்.பின் அந்த குணப்ப ஜலம்விதைகளில் மேல் பாய்ச்சிடவேண்டும். இவ்வாறு செய்துவர தாவரங்கள் சீக்கிரமாக வளரும்.
- தண்ணீர் பாய்ச்சும் போது காலை,மாலை ஊற்ற வேண்டும்.குளிர்காலங்களில் ஒருநாள் விட்டுஒருநாளும், கோடை காலங்களில்காலை மற்றும் மத்தியானமும்,இலையுதிர் காலங்களில் ஒருவேளை (காலை அல்லது மாலை)வசந்த காலங்களில் தினமும் ஊற்றவேண்டும்.
- தாவரங்களில் பூச்சி மற்றும்நோய்கள் வந்தால் குணப்பஜலம் ஏழுநாள் பயன்படுத்தி வர நன்குதீர்வுதரும்.
- பூ மற்றும் பழங்கள் அதற்கேற்றகாலங்களில் அறுவடை செய்யவேண்டும். இலைகள் மற்றும்கிளைகள் மழைக் காலங்களிலும்மற்றும் வசந்த காலங்களிலும்அறுவடை செய்ய வேண்டும். வேர்கள் கோடை காலங்கள்மற்றும் குளிர்காலங்கள், பின்பட்டைகளைக் குளிர்காலங்களில் அறுவடை செய்ய வேண்டும்.
- தாவரம் விலங்குகளின் பிரிவுமண்ணைச் சார்ந்துள்ளது.மண்ணை சார்ந்தும், பற்றியும் வளர்வது அனைத்தும் தாவரவகைஆகும். மண்ணில் மேல் நகர்வது அனைத்தும் விலங்குகள் என்று பிரிக்கப்படுகின்றன.

மண் குளியல்
பாரம்பரிய குளியலில் முக்கியமானது மண் குளியல். அந்தக் காலத்தில் உடல் முழுவதும் மண்ணைத்தேய்த்துக் குளிக்கும் வழக்கம்இயற்கை மருத்துவத்தில் மண் குளியல்சிகிச்சை முறையாகவே செய்தார்கள். குறிப்பாக கோடை காலங்களில் உடல்சூடு மற்றும் சருமப் பிμச்சினைகளுக்கும் தீர்வு தருவதால் மண் சிகிச்சைதற்போது அதிகரித்து வருகிறது. இந்தமண்ணில் உப்பு, உவர், சுண்ணாம்பு,கந்தகம், மைக்கா போன்ற பொருள்கள்இருக்காது. புற்றுமண்ணுக்கு உறிஞ்சும் சக்தியும், வெப்பத்தைக் கிரகிக்கும் தன்மையும் உண்டு. செம்மண், களிமண் போன்றவையும் பயன்படுத்தவும்.
கிச்சையில் மண்ணைக் குழைவாககலக்க வேண்டும். இதை உடல் முழுவதும் மேல் நோக்கிப் பூச வேண்டும்.பிறகு சூரிய ஒளியில் சில நிமிடங்கள்இருக்க வேண்டும். 20 நிமிடங்கள்கழித்து வெயிலில் நின்றபடி குளிர்ந்தநீரில் குளிக்க வேண்டும்.

வாலுக ஸ்வேதம்
ஆயுர்வேதத்தில் இந்த சிகிச்சை முக்கியப் பங்கு வகுக்கிறது. மண் எடுத்து இரும்பு வாணலியில் அல்லதுமண் சட்டியில் வறுப்பார்கள். பிறகுமெல்லிய துணியில் சிறு மூட்டையாகக்கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.குதிக்கால் வலிக்கு ஆற்று மணலை எடுத்து ஒத்தடம் கொடுக்கும்போது வலிகுறைந்து நல்ல பலனை அளிக்கிறது.
வால்மீக மிருத்திகா
வால்மீகம் என்பது எறும்புப் புற்று மண்ணைப் பயன்படுத்துதல் ஆகும். இயல்பாக தோள்களில் பூசுவதாகும்.தொடை வலி, தசைப் பிடிப்பு, விஷ சிசிகிச்சை, சீதபித்தம், தோள் நோய்களில் இதைப் பயன்படுத்தலாம்.
குளவி கூடுகட்டும் மண்
தேனுடன் சேர்த்துச் சாப்பிடும்பொழுது விக்கலுக்கு நல்ல பயன்தருகிறது.
மணலின் உபயோகங்கள் மற்றும் மருந்து தயாரிப்பு
ஆயுர்வேதத்தில் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பெரும்பாலும் மணலைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக கடயந்திரம், போல யந்திரம் முதலியவை உபகரணங்களில் அதிகமாக மருந்து தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகின்றன.
மருந்துகள் மட்டுமல்லாமல் உணவுப் பொருட்கள் தயாரிக்கமணலால் தயாரிக்கப்பட்ட மண்பாத்திரங்களை உபயோகப்படுத்துமாறு ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. மண்ணில் இரும்புச் சத்து, மக்னீசியம் சத்து, தாதுச்சத்து போன்றவை உள்ளன. இந்த மண் பாத்திரங்களையும், உபகரணங்களையும் உபயோகப்படுத்தும் பொழுது மருந்து மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தைக் கூட்டுகிறது.
மூசா
மூசா என்பது மண் சீலையில் செய்யப்பட்ட ஒரு உபகரணம் ஆகும். கனிம மருந்துகள் செய்ய தாது மற்றும் உலோகங்களை உருக்க, ரசவாதம் செய்வதற்கும் இந்த மூசாபயன்படுகின்றது. பஸ்ம மருந்துகள்செய்வதிலும் இம்மூசாவின் பயன்பாடு அதிகம். உதாரணமாக சாமான்யம் மூசா, விருன்தாக்க மூசா, மகாமூசா போன்றவை பிரதானமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. சாதாரண அடுப்பு, சிறப்பு வகை அடுப்பு போன்றவற்றை உருவாக்குவதிலும் மணலின் பயன்பாடு பிரதானமாக உள்ளது. களிமண்ணைக் குழைத்து,செங்கல் வைத்து அடுப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகை அடுப்புகள் அதிகமான வெப்ப நிலையை உருவாக்குவதிலும் தாங்குவதிலும் வல்லமை பொருந்தியது.
வாசா புடபாக சுவரசம்
சாதாரணமாக எல்லாப் பச்சிலைகளிலும் சாறு எளிதாக வெளிப்படும். சில இலைகளில் சாறுகள் பிழிவது கடினம்.உதாரணமாக, ஆடாதோடை, புங்கை,வேம்பு போன்ற பச்சிலைகளிலிருந்து சாறு பிழிவது கடினம். அவ்வகையில் இந்தப் புடபாக முறையைப் பின்பற்றி சாறு எடுக்க ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. இலைகளை எடுத்து கல்கம் ஆக்கி பசைபோல் செய்து உருண்டை ஆக உருட்டவேண்டும். பின்பு, உருண்டையைச்சுற்றி களிமண்ணை 2 அங்குலம்வøர பூச வேண்டும். நன்றாக உலர்ந்தபின் இவ்வுருண்டையை அடுப்பிலிட்டு சிகப்புக் கந்துவர்ணம் வரும்வரை சூடாக்க வேண்டும். பின்பு இவ்வுருண்டையைக் குளிரும் வøரகாத்திருந்து களிமண்ணைக் கலைத்து பசையை மட்டும் எடுத்துப் பிழிந்துசாறு எடுக்கலாம். இதனை அக்னிசுரசம் என்பர்.
“சிகத்த விஞ்னானம்’ என்ற அதிகாரத்தில் மண்ணின் குணங்களும், மருத்துவ பயன்பாடுகளும் கூறப்பட்டுள்ளன. இது மதுரரசம், சீத வீரியம் கொண்டுள்ளது. இதற்கு லேக்கன கர்மம் உள்ளது.
சிகத்த பிரதான யோகம் அதாவது ரசாயனம் இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. 2 பலம் மண் எடுத்து அதில் நெய், எண்ணெய், தேன், மாமிச இறைச்சி, மாமிச மஜ்ஜை சமமான அளவு எடுத்துக் கலக்கவேண்டும். பின்பு கோதுமை மற்றும் திரிபலா லேகியம் சேர்த்து லேகியம்செய்ய வேண்டும். இது இரத்தவாதத்திற்கும் உரக்கதம் (சுவாச நோய்) பயன்படுத்தலாம். 36 கிரõம் லேகியம்பாலில் கலந்து பருகலாம்.
மண் மட்டுமல்ல மண்ணுக்குமேலே உள்ள தாவரங்களும் மண்ணிற்குக் கீழே உள்ள கனிமங்களும் மனிதவளத்தைப் பாதுகாக்க முக்கியபங்கு ஆற்றுகின்றன. மண் மாசுபாடு ஏற்படாமல் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் தலையாயக் கடமையாகும்.அதனால் நெகிழி மற்றும் மக்காத பொருட்கள் ஆகியவற்றை தனிமனிதன் பயன்பாட்டில் தவிர்ப்பது நல்லது. இரசாயன உரங்களை உபயோகப்படுத்தும் பொழுது மண்மலடாகிப் போகிறது. மலட்டுத்தன்மை ஏற்படாமல் இருக்க இயற்கை உரங்களை விவசாயத்திற்கு அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
மண் தான் மண்தான் எல்லாம்
மண் தான்
மறந்தான் மறந்தான் மனிதன்
இதனை மறந்தான்
மண் வளத்தைப் பாதுகாப்போம்
மனித நலத்தைப் பேணுவோம்.
No comments yet.