சிறுதானிய உணவும் சிறக்கும் அறிவும் (Small grain food and excellent knowledge)

Home/Articles/கல்லூரிக் கல்வி/சிறுதானிய உணவும் சிறக்கும் அறிவும் (Small grain food and excellent knowledge)
Small grain food and excellent knowledge

கல்லூரிக் கல்வி

சிறுதானிய உணவும் சிறக்கும் அறிவும் (Small grain food and excellent knowledge)

சிறுதானியங்கள் குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு சாமை, கம்பு, பனிவரகு, சோளம் ஆகிய எட்டும்தான் சிறு தானியங்களாகத் திகழ்கின்றன.Small grain food and excellent knowledge

ஆரம்ப காலத்தில் மூங்கிலில் இருந்து அரிசியைக் கண்டுபிடித்த மனிதன், அதன் தொடர்ச்சியாக நெற்பயிரைக் கண்டுபிடித்து இன்று உணவுத்துறையில் மாபெரும் பசுமைப் புரட்சி செய்துள்ளான். அதன் விளைவாக அரிசியைவிட அளவில் சிறியதாக இருக்கக் கூடிய சிறுதானியங்களைக் கண்டறிந்தான்.

அதாவது மிதமான தட்ப வெப்ப நிலையிலும், சாதாரண மண் வளத்திலும், குறைவான மழை வளத்திலும், குறுகிய கால அளவிலும் பயன்பெறும் அளவில் இந்த சிறுதானியங்களைப் பயிரிட்டான்.

இத்தகைய சிறுதானிய உணவில் அரிசியைவிட சத்து அதிகமாக இருப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து, தொடர்ந்து அதன் நன்மைகளை ஆராயத் தொடங்கியதன் விளைவு, சிறுதானியங்களால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கின்றது, உடலில் இருக்கும் கெட்டக் கொழுப்புகள் குறைக்கப்படுகின்றது, உடல் பருமன் குறைகின்றது என்பது போன்ற பல்வேறு நன்மைகள் கிடைத்தன.

இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கும், இரும்புச்சத்தும், செம்புச் சத்தும் இதில் அதிகம் உள்ளன, இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்த உதவுகின்ற பாஸ்பரஸ் இதில் உள்ளது.

குறிப்பாக இத்தகைய சிறுதானிய உணவுகளால் இளைஞர்களின் மூளை வளம் பெறுகின்றது என்ற உண்மையும் தற்போது வரத்தொடங்கியுள்ளது. எனவே, சிறுதானிய உணவு வகைகள் எவை எவை என்பது குறித்தும், அதன் நன்மைகள் என்னென்ன என்பது குறித்தும் இக்கட்டுரையில் காண்போம்.

குதிரைவாலி அரிசி

புல்வகையைச் சேர்ந்த தாவரமே இந்தக் குதிரைவாலி.

சிறுதானியங்களிலேயே அளவில் மிகவும் சிறியது இதுதான். இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் ஆரம்பம் முதலே இது பயிரிடப்பட்டு வருகின்றது.

 இந்தக் குதிரைவாலி இளைஞர்களின் கண் சம்பந்தமான பிரச்சனைகளைச் சரி செய்யும். உடல் உறுப்புகளைத் தூய்மையாக்கும்.ஞாபக சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதனால் இது இளைஞர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

கேழ்வரகு

இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விளையக்கூடிய சிறுதானியம். இதனை ஆரியம், ராகி, நச்சினி, மண்டுவா, கேப்பை என்று பல பெயர்களில் அழைப்பர். இது எத்தியோபியாவில் உயர்ந்த மலைப்பகுதியில்தான் ஆரம்பத்தில் பயிரிடப்பட்டது.

இன்று தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் அதிகமாகப் பயிரிடும் சிறுதானியமாக உள்ளது. மற்ற சிறு தானியங்களைவிட கேழ்வரகில் மிகவும் அதிகக் கால்சியமும், பாஸ் பரமும் இருப்பதால் உடல் ஆ ரோக் கியம் அடையும். எலும்புக்கு வலிமை சேர்த்து, உடலைக் கட்டுக்கோப்புடன் வைக்க உதவும்.

தினை

உலக அளவில் பயிரிடப்படும் தானியங்களில் இரண்டாமிடம் பிடிப்பது இந்தத் தினை.

  ஆதி கால மனிதனால் முதன்முதலில் பயிரிடப்பட்ட பயிர் இது. தமிழில் இதற்கு இறடி, ஏளல், கங்கு என்று வேறு பெயர்கள் உண்டு. இதில் கால்சியம் பு ரோட்டீன், இரும்புச் சத்து, மெக்னீசியம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. அதிகமான கோபம் மற்றும் கவலை என்ற மன அழுத்தத்தைப் போக்கும் செயலை இது செய்கின்றது. கண்களுக்கு நன்மையளிக்கக்கூடிய பீட்டா க ரோட்டின் இதில் அதிகம் இருப்பதால், இளைஞர்களின் கண் பார்வைக்கு இந்தத் தானியம் உதவுகின்றது.

வரகு

ஏழு அடுக்குத் தோல்களைக் கொண்ட சிறுதானியம் இது. அரிசி, கோதுமையை விட இதில் நார்ச்சத்து அதிகம். உடல் ஆ ரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது. சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடல் எடையைக் குறைக்கும்.

சாமை

சிறுதானிய வகைகளிலேயே மிகவும் உயரமாக வளரக்கூடிய தானிய வகை இது. இதனை 5000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தெற்காசியக் கண்டத்தில் உற்பத்திசெய்யத் தொடங்கிவிட்டனர். ஆரம்பக் காலம் முதலே இதனை நம்முடைய முன்னோர்கள் உணவாக எடுத்துக்கொண்டுள்ளனர் என்பது பண்டைய தமிழர்களின் கல்வெட்டுகள் மூலமாக அறியப்படுகின்றது. இதில் அதிகப்படியான கால்சியம் கிடைக்கிறது. எனவே இளைஞர்களின் உடலுக்கு வலிமைசேர்க்கும். உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும் பணியைச் செய்வதால் இளைஞர்களுக்கு ஆண்மைக் குறைவு முற்றிலும் அகலும்.

கம்பு

இதனைக் கூழ், களி, அடை, தோசை என்று பல வகைகளில் சமைத்து உண்ணலாம். மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் விளைந்துவிடும் பயிர் இது. பெரும்பாலும் கால் நடைகளுக்குத் தீவனமாகவே இதனைப் பயன்படுத்துவர். சிறுதானியங்களிலேயே அதிக அளவு புரோட்டின் இதில்தான் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை இது குறைக்கும், இரும்புச் சத்தை அதிகரிக்கும் உடல் எடையைக் குறைக்கும், இளமையை நீட்டிக்கச் செய்யும். எனவே இளைஞர்களுக்கு இது மிகவும் வேண்டியதாகும்.

பனிவரகு

குளிர்காலங்களில் அதிகாலையில் பெய்கின்ற பனியில் வளர்வதால் இப்பெயர் பெற்றது. இது ஒரு குறுகிய காலப் பயிர்வகை. இதில் நார்ச்சத்து. தாது உப்புகள், மாவுச் சத்து, கால்சியம், சோடியம் அகியவை அடங்கி யிருப்பதால் இளைஞர்களின் உடலினை உறுதிசெய்ய இது உதவு கின்றது.

சோளம்

மிதமான தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் விளையும் பயிர் இது. இதற்குச் சொர்க்கம் என்ற பெயரும் உண்டு. இது வெண்சாமரச் சோளம், சிவப்புச் சோளம், வெள்ளைச் சோளம், பழுப்புநிறச் சோளம் என்று பல வகைப்படும். இதய ஆரோக்கியத்திற்கு இது உதவும், எலும்புகளைப் பலப்படுத்தும், உடல் எடையைக் குறைக்கின்றது, உடலை வலிமைப்படுத்துகிறது. நோய் எதிர்ப்புச் சக்கியை உண்டாக்கும்.

இத்தகைய சிறுதானிய உணவுகள் நம்முடைய உடலினை மேலும் செம்மைப்படுத்தும் என்பதனால் குறிப்பாக இளைஞர்கள் இதனை உண்பதன் மூலமாக, உடலும், உள்ளமும், மனமும், மூளையும் செய்மைப்படும் என்பதில் துளியும் ஐயமில்லை.

Loading

No comments yet.

Leave a comment