சுட்டால்தான் தெரியும் சூடு

Home/Articles/கற்றறியலாம்... நாமே!/சுட்டால்தான் தெரியும் சூடு

சுட்டால்தான் தெரியும் சூடு
பட்டால்தான் தெரியும் பாடு

வாயால் வடை சுடுவோர் கூற்றல்ல இது; அனுபவம் வாய்ந்த அக்கறை நிறைந்தவர்களின் கூற்று. எதையும் அனுபவித்துப் பார்க்கிற போது தான் அதன் உண்மைத் தன்மையைக் கற்று உணர முடிகிறது.

விளக்கைத் தொடாதே, அடுப்பில் இருந்து இறக்கியப் பாத்திரத்தைத் தொடாதே! சுடும்! என்று எத்தனை முறை அடித்துக் கூறினாலும், குழந்தைகள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கையை வைத்துச் சுட்டுக் கொண்ட பிறகுதான் தெரிகிறது, சூடு என்றால் என்ன என்பது!

அதைப்போலவே படாத பாடுபட்டேன் என்று யா÷ரனும் சொன்னால், அந்தப் பாட்டின் ஆழம், வலிபிறருக்குத் தெரிவதில்லை. அவ÷ரபடுகிற போது தான் அதன் வலிஎத்தன்மையது எனத் தெரிகிறது.

ஒருமுறை சுட்டுக் கொண்டால் போதும், குழந்தைகள் மறுமுறை அதை அறவே செய்ய மாட்டார்கள். சூடு என்பதைக் கற்றறிந்து உய்த்துணர்ந்த காரணத்தால் பயம் என்பது இயல்பாகவே அவர்களைத் தொற்றிவிடுகிறது. அதாவது பாடம் படிக்கும் பக்குவம் சிறுவர்களுக்கு குழந்தைப் பருவம் தொடங்கியக் காலத்திலேயே வந்து விடுகிறது.

இப்படிப் பாடம் படிக்கும் திறன், பிற உயிரினங்களுக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அடுத்தவர் வீட்டுத் தோட்டத்திற்குள் புகுந்த ஆடும், மாடும் தோட்டத்தையே துவம்சம் செய்து விடுகின்றன. அந்த ஆட்டையும், மாட்டையும் கட்டிவைத்து அடி அடியென வெளுத்துவிட்டார் தோட்டக்காரர்.

ஆனால் இரண்டு நாள் கழித்து அதேஆடும் மாடும் அந்தத் தோட்டத்தில்வேலியைத் தாண்டி பயிர்களைமேய்ந்து கொண்டிருந்தன.

இதற்கு என்ன காரணம்? அன்றுவாங்கிய அடி உதைகளில் இருந்து அந்த விலங்குகள் பாடம் படிக்கவில்லையா? அடி வாங்கிப் பட்டபாடுகள் அந்த விலங்குகளின் நினைவில் தங்காமல் போனதற்குக் காரணம் என்ன? தன் வீட்டு முதலாளி சைகை செய்து அழைத்தால் அவனை அண்டிப் போகத் தெரிகிறது. காட்டுப்பகுதிகளில் மேயச் சென்றால் மாலை வேளையில் தன் வீட்டைத் தேடிபாதை மறவாமல் வரத் தெரிகிறது.அடுத்தவன் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்ததால் வாங்கிய அடியும்,உதையும் மட்டும் எப்படி மறந்துபோகிறது?

இதற்குக் காரணம் மனிதர்களுக்கு ஆறறிவு. ஆனால் விலங்குகளுக்கு ஐந்தறிவு மட்டும் தான். எனவே பகுத்தறிவைப் பயன்படுத்தி அடுத்தக் கொல்லையில் மேய்வது திருட்டு என்பதை அந்த விலங்குகளால் உணர முடியவில்லை என்கிற காரணத்தைக் கூறலாமா?

அப்படியானால் கைப் பம்பை தலையால் கீழே அழுத்தும் போது நிலத்தடி பைப்பில் நீர் வரும் என்பதை உணர்ந்த மாடுகள், அவ்வாறு செயல்பட்டு நீர் அருந்தும் காட்சிகளை எத்தனை முறை வாட்ஸ்அப் வீடியோக்களில் பார்த்திருக்கிறோம்.

குரங்குகள் வெகு லாவகமாக செயின் ஜிப்புகளை இழுத்துப்பைகளைத் திறப்பதையும் எத்தனைத்தடவைப் பார்த்திருக்கிறோம்.

தூக்கணாங்குருவி மழையில் நனையாமல் இருக்க குஞ்சுகள் தங்குவதற்கான அறையுடன் கூடியகூடுகளைக் கட்டுகிறது. அந்த அறிவைபறவைகளின் ஆறாவது அறிவு என்று சொல்லாமல் என்ன சொல்வது?

எங்கள் வீட்டுத் திண்ணையில் இரண்டுச் சிட்டுக்குருவிகள் வைக்கோல், புல் நார்களைக் கொண்டு கூடு கட்டுவதில் மும்மரமாக இருந்தன.நாள்தோறும் அந்தக் குருவிகள் கட்டும் கூட்டின் நேர்த்தியைக் கண்டு ரசித்தோம். கூடு கட்டி முடிக்க இருக்கிற தருவாயில், மின்சாரம் தடைபட்டு நின்று போன சீலிங்ஃபேன் திடீöரன மின்சாரம் வந்து சுழன்றதால் லேசாக அடிபட்டு ஒருகுருவி கத்திக் கொண்டேப் பறக்க இன்னொரு குருவியும் அதனைப்பின் தொடர்ந்து பறந்தது.

இது நடந்து முடிந்த பிறகு, ஒவ்வொரு நாளும் ஆவலோடு பார்த்து வந்தோம். அந்தக் குருவிகள்வரவே இல்லை. அரைகுறையாகக் கட்டப்பட்ட அந்தக் கூட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் பொருட்களும்,நார்களும் அனாதைகளாய் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. இந்த இடம் கூடு கட்டவோ,முட்டையிடவோ, குஞ்சுகளைப்பொரிக்கவோ பாதுகாப்பானது அல்ல என்கிற அறிவு அந்தக் குருவிகளுக்கு எப்படி வந்திருக்கும்?

அடிபைப்பை இப்படி இயக்கினால் நீர் வரும் என்பதையும், ஒரு கையில் பையைப் பிடித்துக் கொண்டு மறுகையால் ஜிப்பை இழுத்தால் பைதிறக்கும் என்பதையும் இவைகளுக்கு கற்றுத் தந்தவர், கற்பித்தவர் யார்? அவை தானே பட்டு உணர்ந்துகொண்டன; அனுபவத்தால் அறிந்துதெரிந்து கொண்டன.

அப்படியானால் அந்த ஆடும்,மாடும் பட்டதை உணரõமல் மீண்டும்அடுத்தவன் தோட்டத்தில் நுழைகிறதேஏன்? அதற்குக் காரணம் அறிவைமிஞ்சிய பசி, தாகம்! அடி பட்டாலும்பரவாயில்லை பசி தீர்ந்தால் போதும்என்கிறத் தேவையை அடைகின்றதேடல்.

அதுமட்டுமல்ல; கோடை காலங்களில் மேய்வதற்குச் சென்றசில பசுக்களும், எருமைகளும் வீடு திரும்புவதில்லை. காரணம் அவற்றின் இனக்கவர்ச்சித் தேடல்கள்,அந்தத் தேடலில் வந்த வழி மறந்துபோய் அவை வீடு திரும்பாமல் எங்கோச் சுற்றித் திரிகின்றன. இதேபோல மனிதர்களின் தேடல்களும் சிலவேளைகளில் அவர்களின் அறிவைமயங்கச் செய்து முறைகேடுகளில் ஈடுபடத் தூண்டுகின்றன.

ஆக, மனிதர்களும், விலங்குகளும்,பறவைகளும் இன்னும் பிற உயிரினங்களும் தன் தேவையை அடைவதற்காகச் செயல்படுகிறபோது,பட்டு உணர்கின்றன; கற்றுணர்ந்து தெரிந்து கொள்கின்றன. கற்றல் என்பது எப்போதும் எழுத்துகளைப் பார்த்துப்படித்தல் என்கிற பொருளில் மட்டுமே அமைவதில்லை. அனுபவித்து உணர்தல் கூட கற்றறிதல் என்றே பொருள்படும்.

சொல் புத்தியும்; சுய புத்தியும்

புத்தி என்பதற்கு அறிவு, இடித்துரை,போதனை என்று கழகத் தமிழ் அகரõதிபொருள் கூறுகிறது. ஆனால் சமூகப்போக்கில் புத்தி என்றால் அது அவைமுன் சொல்லக்கூடாத ஒருசொல்லாகக் கருதப்படுகிறது. காரணம் அறிவு நிலை மயக்கம் கொண்டவரைப் புத்தி சுவாதீனம் இல்லாமல் இருக்கிறார் என்று கூறுவது உண்டு. அதனால் தானோ என்னவோ புத்தி அவையோர் முன் உரைக்கக் கூடாதச் சொல்லாக, அதற்கு இணையாக அறிவு என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அதாவது “மயிர்’ என்பதை “முடி’ என்று சொல்வதைப் போல. எப்படியோ சொல் புத்தியும் சுய புத்தியும் என்பதை சொல்லறிவும், சுய அறிவும் என்று சொன்னால், மென்மையும் நாகரீகமும் கொண்டதாக இருக்குமோன்னு எண்ணத் தோன்றுகிறது.

இப்படி ஒரு சொல் அதன் பொருளில் வழங்கப்பட்டாலும், அதற்கு மொழிபொருள், சமூகப் பொருள் என்று வெவ்வேறு வகையான தான பொருள்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சான்றாக ஆங்கிலத்தில் sex  என்பதற்குப் பாலினம் என்பது மொழிப்பொருளாகவும், உடலுறவு என்பது சமூகப் பொருளாகவும் வழக்கில் உள்ளதை நாம் கண்டு வருகிறோம்.

அதாவது சமூகப் பொருள் என்பது காலம் காலமாக பலரõலும் கையாளப்படும் பொருளாகும். சான்றாகப் பெண்ணின் மார்பகத்தை முலை என்று இலக்கியங்கள் எள்ளளவும் அறுவருப்பின்றிப்பயன்படுத்தி வருகின்றன. காரணம் அதுதான் மொழிப்பொருள். இதிலே கூச்சப்பட எதுவும் இல்லை. ஆனால் சமூகம் அந்தச் சொல்லை அவையில் வெளிப்படையாகக்கூறப்படக்கூடாதச் சொல் என்றும், அது காமத்தின் பாற்பட்டது என்றும் பொருள் கொள்கிறது.

தமிழில் “அரங்கேற்றம்’ என்று ஒருசொல் இருக்கிறது. அரங்கம் எனும் அடிச்சொல்லிலிருந்துத் தோன்றுவது அரங்கேற்றம். அரங்கம் என்றால் சபை, கூடம், களம் என்பன பொருளாகும். அதாவதுக் காட்சிப்படுத்தப்பட வேண்டிய கலையம்சங்கள், கலைச்செயல்பாடுகள் அரங்கிலே ஏற்றப்படுவதுண்டு; அரங்கில் ஏற்றப்படுகிறது என்றால் அதைப் பலரும் கண்டுகளிக்க வேண்டும். எனவே தான் அந்நிகழ்வுகள் விழாக்களைப் போல உற்சாகத்தோடு நடத்தப்படுகின்றன.

ஆனால் இன்றைய பெருவாரியான செய்தி மற்றும் தொலைக்காட்சி  ஊடகங்கள் அரங்கேற்றுதல் என்கிறச்சொல்லை மிக மிகக் கேவலமான முறையில் பயன்படுத்தி வருகின்றன. ஊடகங்களில் கீழ் வருமாறு உரைக்கப்படுகிறது.

“”புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 17 வயதுப் பெண்ணைகூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.”

“”பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த செயல் அரங்கேறியுள்ளது.”

 

“”பூட்டிய வீட்டின் ஜன்னல்களை உடைத்துக் கொள்ளையடித்த நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.”

இதுவெல்லாம் என் கூற்று அல்ல. நாமே கற்றறியலாம் என்கிறப் போக்கிலே பயணம் செய்து கொண்டிருக்கும் நீங்கள் தொடர்ந்து ஊடகச் செய்திகளைக் கேட்டுப்பாருங்கள்; அல்லது படித்துப்பாருங்கள். இந்த ஊடகங்கள் எவை எவற்றையெல்லாம் அரங்கேற்றம் செய்கின்றன என்கிற அவல நிலை உங்களுக்குப் புரிய வரும்.

இப்படி அவலங்களை எல்லாம் அரங்கேற்றி வருகின்ற ஊடகங்களைத் திருத்த யாரும் முன் வருவதில்லையே ஏன்? அதுதான் புரியவில்லை.

ஊடகங்கள் வேண்டுமென்றே இந்ததவறைச் செய்யவில்லை. புரிதல் இல்லாமையே காரணம். ஊடகச் செய்தியாளர்கள் தம் முன்னோர்களைப் பின்பற்றுகிறார்களே ஒழிய இப்படிச் சொல்வது தவறில்லையா எனச் சிந்திப்பதில்லை. காரணம் கற்றறியலாம் நாமே என்கிற முனைப்பு இல்லாமல் போவதே.

ஏன்? எதற்கு?

நடைமுறையில் உள்ளதை அப்படியே பின்பற்றுவது ஒருவகை; இதில் சிரமங்கள் எதுவும் இருப்பதில்லை; சிந்திக்க வேண்டிய அவசியமும் இல்லை; இது ஒரு அனிச்சையான செயல். செக்கில் பூட்டப்பட்ட மாடுகள் போல செக்கு ஆட்டுபவர் நிறுத்தும் வரை அவைச் சுற்றிக்கொண்டே இருக்கும். ஏன் சுற்றுகிறோம்? எதற்காகச் சுற்றுகிறோம்? என்பது பற்றி அந்தமாடுகள் சிந்திப்பதே இல்லை.நம்மிலும் பலர் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

பூஜை செய்வதையும், பு÷ரõகிதம் செய்வதையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்த அவர், நாள்தோறும் தம்வீட்டில் தவறாமல் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதுவும் சமுதாயச் சடங்குகள், ஆச்சார நெறிமுறைகள் என்று எதையும் விட்டுவிடாமல் அவர் செய்கிற பூஜை ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு நடைபெறும்.

அவர் செய்கிற பூஜையில் கும்பம், தெய்வப் படங்கள், நைவேத்தியம்,இதரப் பொருள்கள், அப்புறம் பூனைக்குட்டி ஒன்று தவறாமல் இடம்பெறும்.குடும்பத்தினர் அனைவரும் சுற்றி அமர்ந்து கொண்டு பக்திப் பரவசத்தோடு அந்தப் பூஜையில் கலந்து கொள்வது வழக்கம்.

நாளடைவில் முதுகு வலி மற்றும் வயது மூப்புக் காரணமாக அவரõல் அந்தப் பூஜையை நாள்தோறும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தந்தையாருக்கு உடல்நிலை ஒத்துக் கொள்ளாத காரணத்தால் அந்தப் பூஜையை அவருடைய மகன் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்தார். இப்பஐ நாட்கள், மாதங்கள் உருண்டன. ஒருநாள் அந்தப் பெரியவர், மகன் செய்துவரும் பூஜை எப்படிப் போகிறது? பார்க்கலாமே! என இடையே வந்து அமர்ந்தார். எல்லா சம்பிரதாயங்களும் முறையாகப் பின்பற்றப்பட்டு பூஜை நடந்தேறியது.

எல்லாவற்றையும் கண்ணுற்றப் பெரியவர், “”ஆமாம் நம்மாத்து பூனை செத்துப் போச்சுன்னு சொன்னேளே இப்போ இந்தப் பூனை எங்கே இருந்து வந்தது? இதை ஏன் கட்டிவச்சிருக்கேள்?” என்று கேட்டார்.

“”நீங்கள் பூஜை செய்தபோது தொடங்கும் முன்பாகவே பூனையைக்கட்டி வைப்பேள் நம்மாத்துப் பூனை செத்துப்போன பின் பக்கத்து ஆத்திலே இருந்து இதைப் பிடித்து வந்து பூஜைக்கு பயன்படுத்துகிறோம்”என்று மகன் சொன்னானாம்.

பெரியவர் தலையில் அடித்துக்கொண்டு சொன்னாரõம். “”நான் பூஜை செய்கிறபோது நம்மாத்துப் பூனை தொந்தரவு செய்யக்கூடாது என்று கட்டி வைத்து விடுவேன். இல்லேன்னா அது அங்கே இங்÷ கஓடுவதோடு மட்டுமில்லாமல் நைவேத்தியத்திலும் வாயை வைத்துவிடும். அதன் அட்டகாசம் தாங்காமல் தான் அந்தப் பூனையைக் கட்டிவச்சிட்டு பூஜையை செய்து கொண்டிருந்தேன். அந்தப் பூனைசெத்துப் போச்சுன்னு கேட்டப்பே õதொந்தரவு தொலைந்துதுன்னு நினைச்சேன். ஆனா நீங்க எதுவுமே யோசிக்காமல் இன்னொரு பூனையைப்பிடித்து வந்து கட்டி வச்சிருக்கேள்”என்றாரõம்.

தந்தையார் பூஜை செய்தபோது இந்தப் பூனையை ஏன் கட்டிவைத்தார்? எதற்காகக் கட்டி வைத்தார்? என்று கொஞ்சமும் யோசிக்காமல் அவர் அப்படி செய்தார் நாமும் அப்படித்தானே செய்யவேண்டும் என்று பின்பற்றுவது மூடத்தனம். மூடத்தனம் என்பதோடு மட்டுமல்லாமல், சிந்திக்கத் தெரியாத அறிவீனம் என்றும் சொல்லலாம். எதனைக் கண்ணுற்றாலும் ஏன்? எதற்கு? எப்படி? என்கிற வினாக்களைத் தொடுக்கும்போது, நாம் கண்டறிய வேண்டாமா என்கிற முனைப்பு எழுகிறது. அந்தமுனைப்பு உங்கள் சிந்தனையை விரிவடையச் செய்கிறது. அதனால் புதிய உத்திகளும், கண்டுபிடிப்புகளும் உருவாகின்றன. அதனால் கற்றறிய வேண்டும் நாமே.

பரம்பரை

“குலதெய்வ வழிபாடு பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வருவது’.”நம் பரம்பரைக்கு ஒரு இழுக்கு வந்துவிடக்கூடாது’. “நம் பரம்பரையிலேயே இவன்தான் கேவலமானவன்.’ இப்பஐ எல்லாம் அன்றாட உரையாடல் வழக்கில் பரம்பரை என்கிற சொல்லை மிகச்சாதாரணமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பரம்பரை என்பது யாது? இச்சொல்லின் வேர் யாது? இதன் பொருள்யாது? என்று அறிய சற்று நாம்முனைப்போடு செயல்படுவோம்.

தொன்றுதொட்டு சம்பிரதாயம். தொடர்பு, பரவணி, வம்சம், என்றெல்லாம் பொருள் தரும் இச்சொல், பரம்பரை என்னும் வடமொழிச்சொல்லின் திரிபு என்பாரும் உலர். ஆயின் உண்மையில் இச்சொல் பரன்+ பரை எனும் இரு சொற்களின் புணர்ச்சியே (இணைப்பே) ஆகும்.

இச்சொல் நமது ஏழாம் தலைமுறையைக் குறிக்கும். நாம் இந்த தலைமுறையில் இருக்கிறோம் என்றால் நமக்கு முந்தைய ஆறுதலைமுறைகளைப் பின்வருமாறு குறிக்கின்றனர்.

தலைமுறை நாம்
நமக்கு முந்தைய

தலைமுறை

தந்தை, தாய்
மூன்றாம்

தலைமுறை

பாட்டன்,

பாட்டி

நான்காம்

தலைமுறை

பூட்டன்,

பூட்டி

ஐந்தாம்

தலைமுறை

ஓட்டன்,

ஓட்டி

ஆறாம்

தலைமுறை

சேயோன்,

சேயோள்

ஏழாம்

தலைமுறை

பரன், பரை

ஒரு தலைமுறை என்பது 33ஆண்டுகள் என தோரõயமாகக் கணக்கிடுகின்றனர். அதாவது தந்தைக்குமகனாக இருப்பவன் தனக்கு ஒருவாரிசை பெற்றெடுக்கும் காலம்÷ தாரõயமாக 33 ஆண்டுகள். அந்த வகையில் ஒரு பரம்பரை என்பது ஏழு தலைமுறைகளைக் கொண்டது.அதாவது 231 ஆண்டுகளைக் கொண்டது ஒரு பரம்பரை.

குத்தகை, ஒத்தி என்பதெல்லாம் முற்காலங்களில் 99 ஆண்டுகால கெடுவிற்கு எழுதப்படுவது வழக்கம்.இதன் நோக்கம் மூன்று தலைமுறைகளில் ஒரு பரம்பரை ஏழையாவதும் உண்டு பணக்காரனாவதும் உண்டு. எனவே ஒத்தி, குத்தகை என்பதெல்லாம் மூன்று தலைமுறைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்பதைக் கருதியே 99 ஆண்டுகளுக்கு ஒப்பந்தங்கள் இடப்பட்டன.

பரம்பரை என்கிற சொல்லில் இத்தனை விளக்கங்கள் உள்ளன. நம்மில் பலர் பரம்பரை என்பதன் உண்மைப் பொருளை அறியாது எல்லோரும் சொல்கிறார்களே என்று சொல்லி வருகின்றனர். இதுவே சொல்புத்தி ஆகும். அதாவது கேட்டதைக் கேட்டவாறு பின்பற்றுதல் அல்லது பயன்படுத்துதல். அவ்வாறில்லாமல் பரம்பரை என்பதின் உண்மைப்பொருளை கண்டறியும் முறையேதானேக் கற்றறிதல் ஆகும்.

ஐயா, அய்யா எது சரி?

சிலர் ஐயா என்று எழுதுகின்றனர்;சிலர் அய்யா என்று எழுதுகின்றனர்.எப்படியும் எழுதலாம் என்று சிலர்கூறினாலும் இப்படித்தான் கூற வேண்டும் என இலக்கணம் கூறுகிறது.உயிர், உடல், ஆயுதம் இவற்றோடுத்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி, பேசும் மொழியிலும் உயிர்எழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும், ஆயுத எழுத்தையும் உருவாக்கி சங்கம் வைத்து ஆரõய்ந்து தமிழ் மொழியை வளர்த்துள்ளனர்.

ஒரு இயந்திரத்தைத் தயாரித்தவர் அதற்கான operational manual எழுதிவைப்பதைப் போல சங்கத் தமிழரும் தமிழை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தமிழுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்துள்ளனர். அந்தவகையில் எழுத்துகளால் அசையும், அசைகளால் சொற்களும், சொற்களால்தொடரும் (சொற்றொடர்) அமையும்வகையினை இலக்கண நூல்களான தொல்காப்பியமும் நன்னூலும்விரித்து ஓதுகின்றன. அந்த இலக்கணநெறிகளைப் பின்பற்றி வருவதனால்தான் தமிழ் மொழி இன்றளவும் சீரிளமை குன்றாத வகையில் கட்டமைப்புக் குறையாத வகையில் இயங்கி வருகிறது.

இலக்கணம் அறியாத ஒருசிலர் தம் விருப்பப்படி மொழிக்கட்டமைப்பில், சில குளறுபடிகளைப்புகுத்தி விடுவதனால், சொல்புத்தி மட்டுமே ஊன்றுகோலாகக் கொண்டு செயல்படுபவர்களால் மொழிச்சிதைவு ஏற்படுகிறது.

தமிழ் எழுத்துகளை குறில், நெடில்,ஒற்று என்று பகுத்துள்ளது இலக்கணம்.அதன் ஒலி அளவை முறையே ஒருமாத்திரை, இரு மாத்திரை, அரைமாத்திரை என வகைப்படுத்தி உள்ளது. இந்த மாத்திரை அளவுகள் மாறுபடுகிறபோது சொல்லின் பொருளும் மாறுபடுகிறது. சான்றாக மகன் என்பதை மகான் என்று மாத்திரையைக் கூட்டி எழுதினாலோ, பேசினாலோ அதன்பொருள் முற்றிலும் மாறுபடுகிறது. இதேபோல பகவன் என்பதற்கும் பகவான் என்பதற்கும் நிறையவேறுபாடுகள் உண்டு. பகவன், பகவான் எனும் இருச்சொற்களு மேசமஸ்கிருத சொற்கள் என்றும் கூறுகின்றனர். இரண்டுமே கடவுள் என்கிற பொருளைத் தருகின்றன என பொதுவாகக் கூறினாலும் பகவன் எனும் சொல் கடவுள், குரு, நான்முகன், புத்தன், அரண், அரி, அருகன் என ஏழு பொருள்களைக்கொண்டிருப்பதாக கழகத் தமிழ் அகரõதி கூறுகிறது.

அதே வேளையில் பகவான் எனும்சொல் பெருமாளைக் குறிக்கிறது. பகவான் என்பதைப் பிரித்தால் பகவு+ ஆன் எனப் பிரியும். பகவு என்றால் பிரிவு. பகம் என்பதன் திரிபு. பகம் என்பது அவாவின்மை, ஈச்சுரத்தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரியம் என்கிற ஆறு குணங்களைக் குறிக்கும்.இந்த ஆறு குணங்கள் கொண்டவ÷ர பெருமாள். எனவே பகவன் என்பது பொதுவாகக் கடவுளையும் பகவான் என்பது குறிப்பாக பெருமாளையும் குறிக்கும் என்கிற விவாதத்திற்கு வழிவகுக்கின்றன இந்த சொற்கள்.

ஆக பகவன் என்று குறுகி ஒலிப்பதற்கும் பகவான் என நீட்டி ஒலிப்பதற்கும் எத்தனை வேறுபாடுகள் வருகின்றன என்பதை நம்மால் உணரமுடிகிறது.

இதைப் போலத்தான் ஐயா என்பதற்கும் அய்யா என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பலர் ஐயா என எழுதுகின்றனர் சிலர் அய்யா என எழுதுகின்றனர் எது சரி?

ஐ என்பது நெடில் இதன் மாத்திரை அளவு இரண்டு

ஐ என்றால் தலைவன் என்று பொருள்படும்.

 

ஐயா என்கிற போது தலைவா என விளிப் பெயரõக அமைகிறது.மேலும் மரியாதை என்கிற உயர்பண்பை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. அதேவேளையில் அய்யா என விளிக்கிற போது “அய்’என்பது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கிறது. தமிழ் மொழியில் ஒரு மாத்திரை, இரு மாத்திரை. அரை மாத்திரை ஒலி அளவைக் கொண்ட எழுத்துகளே உள்ளன. ஒன்றரைமாத்திரை கொண்ட தனி எழுத்து என்பதில்லை. குறிலும் ஒற்றும் சேர்வதால் ஒன்றரை மாத்திரை ஒலிக்கும்.அது எழுத்து எனப்படாது. அசை எனப்படும். எனவே அய் எனும் அசைக்கும் பொருள் எதுவும் இல்லை. அய்யா என்று விளிக்கும் போதும் பொருள் எதுவும் இல்லாத அசைச்சொல்லாகவே அமையும். இதைத்தான் இலக்கண நூல்களான தொல்காப்பியம் நன்னூல் போன்றவையும் உரைக்கின்றன.

கற்றறியலாம் நாமே இன்னும் பல கோணங்களில்.

Loading

No comments yet.

Leave a comment