ஒரு உடற்பயிற்சி பயிற்றுநர் அல்லது ஆசிரியர் செய்யும் பணி, அவர்களின் உடலிலும் வாழ்க்கையிலும் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இது ஒரு பொறுப்புமிக்க பணியாகும். எந்தவொரு வாழ்க்கைத்தொழிலாக இருந்தாலும், அதன் வெற்றி என்பது அதில் கிடைக்கும் நிதிசார்ந்த பயன்களால் மட்டும் அளவிடப்படுவதில்லை. உண்மையில், நிதிசார்ந்த பயன்கள் அல்லது வெற்றிகள் மிகவும் அர்த்தமுள்ள மற்றும் திருப்திகரமான மாற்றுத் தொழில்களைத் தொடுவதற்கான முதல் படியாகும் என்பதை உணர வேண்டும். குறிப்பாக, இன்றைய உலகில் ஆரோக்கியத்தின் மீது மக்கள் கவனம் செலுத்தி வருவதால், உடற்பயிற்சி பயிற்றுநர் வேலைக்கான வாய்ப்புகள் பன்மடங்கு பெருகி வருகின்றன.
1. உடற்தகுதியின் முக்கியத்துவமும் தொழில் வாய்ப்புகளும்
தனிப்பட்ட வாழ்க்கையில் மைல்கற்களில் பெரும்பகுதியை அடைந்தவர்கள், கற்றல் செயல்முறையை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள விரும்பலாம். குறிப்பாக, கரோனாவுக்குப் பிந்தைய சூழலில், மக்களிடையே உடல்நலம் மற்றும் மனநலம்-உடற்தகுதி சார்ந்த முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இதனால், உடல்நலத்தகுதி குறித்துக் கற்பித்தல் அல்லது உடற்பயிற்சி அளிப்பது பலரும் விரும்பிச் செய்யும் வாழ்க்கைத்தொழிலாக மாறியுள்ளது.
அ. உடற்தகுதியின் விளக்கம்:
உடற்தகுதி என்பது வெறும் உடல் கட்டுமானம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், உடற்தகுதி என்பது உடலுக்குப் பெரிய அளவில் அயற்சி மற்றும் பாதிப்பை ஏற்படுத்தாமல், தினசரி வாழ்வியல் நடவடிக்கைகளை மிகுந்த உற்சாகம் மற்றும் ஊக்கத்துடன் செயல்படுத்தும் திறனையே உடற்தகுதி என்கிறோம். வெறும் தசைகளின் வலிமை மட்டுமல்ல, உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் திறனே இங்கு உடற்தகுதியாகக் கருதப்படுகிறது.
ஆ. பிரபலமாகும் உடற்பயிற்சிப் பயிற்றுநர்:
இயல்பாகத் தன்னம்பிக்கையை விதைப்பவராகவோ, உந்தாற்றலுடன் செயல்படக்கூடியவராகவோ இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி பயிற்றுநர் ஆகும் ஆர்வம் அதிகமாகக் காணப்படுகிறது. உடற்தகுதி பயிற்றுநர்கள் மற்றும் பிரபல திரை நட்சத்திரங்கள் தங்கள் உடற்பயிற்சி அல்லது உடல்தகுதி சாதனைகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு வருவதால், உடல்நலம் சார்ந்த ஆர்வம் பெருகி, உடல்தகுதியை மேம்படுத்திக்கொள்ளும் ஊக்கம் பலரிடமும் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது.
இ. கல்வி மற்றும் சான்றிதழ்கள்:
உடற்தகுதியைப் பாடத்திட்டமாக வகுத்து, முறையாகப் போதித்து, சான்றிதழ் அளிக்கும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதால், உடற்தகுதியை எளிதாகவும், வேகமாகவும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் பலரிடமும் ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அடைந்த முன்னேற்றம் மற்றும் பலன்களால் ஊக்கம் பெற்று, அதன் பயனை மற்றவர்களுக்கும் விளக்கவும், கற்பிக்கவும், ஊக்கப்படுத்தவும் பலரும் முன்வருகிறார்கள்.
2. உடற்பயிற்சி பயிற்றுநரின் பொறுப்புகள்
ஒரு உடற்பயிற்சி பயிற்றுநர் ஆவது என்பது நட்சத்திர அந்தஸ்தை அனுபவிப்பதோ அல்லது உங்கள் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் மற்றவர்களுக்கு உதவுவதோ மட்டும் அல்ல. இது ஒரு பொறுப்புமிகுந்த பணியாகும்.
பணியின் பன்முகத்தன்மை: பொதுவான உடற்பயிற்சிகள், உடல் இயக்கங்கள், சுவாச நுட்பங்கள் அல்லது தீவிரமான பயிற்சிகளில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றைக் கற்றுத்தருவது மட்டும் உடற்பயிற்சி பயிற்றுநரின் பணியல்ல. தினசரி வாழ்க்கைக்கான செயல்பாடு, தடகளம், மறுதகவமைப்பு, முதியோர்கள், மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலம், வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனைகள் போன்ற பல அம்சங்களும் இதில் உள்ளடங்கும். எனவே, பயிற்றுநருக்குப் பல்வகைப்பட்ட துறைகளில் அறிவு இருப்பது அவசியம்.
தனிப்பயனாக்கம்: எல்லாப் பிரிவினருக்கும் ஒரே வகையான உடற்பயிற்சித் திட்டங்களைக் கற்பிக்கும் அணுகுமுறையைப் பின்பற்ற முடியாது. உடலின் தன்மை, உடல் தகுதி, உடல்நலக் கோளாறுகள், வெவ்வேறு வயதினர் (குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், மூத்தவர்கள்) போன்ற பல்வேறு கூறுகளைக் கருத்தில் கொண்டு, அதனடிப்படையில் தனித்தனிப் பயிற்சித் திட்டங்களை வகுத்து உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டியது அவசியமாகும்.
ஆழமான அறிவு: ஒவ்வொரு தனிநபரின் உடற்பயிற்சி சார்ந்த குறிப்பிட்ட மற்றும் தனித்துவமான தேவைகளைப் புரிந்துகொள்வதற்குத் துல்லியமான அறிவும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும், அவர்களின் தேவைகளுக்குத் தகுந்தவாறு நமது அறிவையும் அனுபவத்தையும் சீராகப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமாகவும், வெற்றிகரமாகவும் பயிற்சி அளிப்பது முக்கியமாகும்.
3. தரமான பயிற்சி மற்றும் கல்வி
ஒரு உடற்பயிற்சி பயிற்றுநர் ஆவதற்குக் கடின உழைப்பும் ஆர்வமும் மட்டும் போதாது. தரமான பயிற்சி அவசியம்.
முறையான கல்வி: பொதுவான உடற்பயிற்சி அல்லது குறிப்பிட்ட தேவைக்கான உடற்பயிற்சி என எதுவாக இருந்தாலும், அவற்றைக் முறையான, தரமான கல்வித் திட்டங்களின் வாயிலாகக் கற்றுக்கொள்வது அவசியமாகும். ஒரு பயிற்றுநரின் தரம், அவர் ஒரு நல்ல ஆசிரியர் பயிற்றுநரின் கண்காணிப்பில் முறையாகப் பயிற்சி பெற்றிருப்பதில் தான் உறுதி செய்யப்படும்.
தொடர் கற்றல்: உடற்பயிற்சித் துறை சார்ந்த அறிவு மற்றும் தகவல்கள் பரந்துபட்டது மட்டுமல்ல, காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே இருப்பதாகும். எனவே, தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்வது, பயிற்றுநரின் திறன் தொகுப்பை மேம்படுத்த உதவும். இதன் வாயிலாகக் கிடைக்கும் அறிவின்மூலம் பல்வேறு வகையான மக்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும்.
4. அனுபவம் மற்றும் அங்கீகாரம்
ஒரு நபரின் உடற்தகுதிக்குப் பொறுப்பேற்பதை இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆர்வமும் நிபுணத்துவமும் ஒருங்கினைந்துவிட்டால் அது வெற்றிகரமான பயிற்றுநராக வலம் வருவதற்கு உதவியாக இருக்கும்.
திறன் தொகுப்பு: உடலசைவுகள் அல்லது உடற்பயிற்சிகள் உடலைக் குணப்படுத்தவும், பலப்படுத்தவும் அல்லது தீங்கு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவும் வழிவகுக்கும். ஆனால் உடற்தகுதி சார்ந்த பயிற்சி அல்லது கல்வி எப்படிப் போதிக்கப்படுகிறது என்பதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது.
சரியான தேர்வு: பயிற்சியாளராகத் தகுதி பெற, ஒரு பயிற்சித் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ஆசிரியர் பயிற்றுநரின் திறன்களை அளந்தறிந்து, அதன்பிறகு பயிற்சியில் சேர வேண்டும்.
உடற்பயிற்சி பயிற்றுநர் ஆவது என்பது ஒரு லாபகரமான தொழிலாக மட்டுமல்லாமல், சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மதிப்புமிக்க பணியாகவும் உள்ளது. இதன் மூலம், தனிநபர்கள் ஆரோக்கியமாக வாழவும், தங்கள் உடலின் முழுத் திறனையும் உணரவும் உதவ முடியும்.
மேலும் படிக்க ..
![]()








No comments yet.