
Watermelon ஆண் தர்ப்பூசணி, பெண் தர்ப்பூசணி எதை வாங்க வேண்டும்?
தர்ப்பூசணி பழங்கள் ஆண், பெண் என இரு வகையாகப் பிரிக்கப்படும். ஆண் தர்ப்பூசணி பழங்கள் பெரியதாகவும், நீள் வாட்டத்துடனும் இருக்கும். இத்தகைய பழங்கள் சுமாரான சுவையுடன் இருக்கும். அதிக நீர் கொண்டதாகவும் இருக்கும். பெண் தர்ப்பூசணிப் பழங்கள் முழுமையான வட்ட வடிவத்திலும், அதிகஇனிப்புச் சுவை கொண்டதாவும் இருக்கும். அது தெரியாத பலரும் பழங்கள் உருவத்தில் பெரியதாகவும், அதிக இனிப்பில்லாத ஆண் பழங்களை வாங்குகிறார்கள். தர்ப்பூசணிப் பழத்தின் காம்பு காய்ந்திரந்தால், அந்தப் பழம் பழுத்து விட்டது என்று அர்த்தம். காம்பு பச்சையாக இருந்தால் முழுமையாகச் பழுப்பதற்கு
முன்னர் பறிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம். இந்த வகை பழத்தை தவிர்த்துவிடுவது நல்லது. தர்ப்பூசணி பழத்தின் மேல் வலைப்பின்னலாக பழுப்புநிற கோடுகள் இருந்தால் அந்தப் பழம் அடிப்பட்டதாக நினைத்து பெரும்பாலோர் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதுதான் நல்ல
ஆரோக்கியமான பழமாகும்.
No comments yet.