நடப்பேற்றம் (updation) கொள்ளுதல்
மாறிவரும் சமூக அமைப்பில், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில், முன்னேற்றம் கண்டுவரும் அறிவியல் வளர்ச்சியில் நாளும், நாளும் புதுமைகள் பூத்து வருகின்றன.
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற போக்கு ஒவ்வொரு துறையின் வளர்ச்சியிலும் உண்மையாகி வருகிறது.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல காலவகையினானே.
இது பவணந்தி முனிவரின் நன்னூல் நூற்பா.
The old order changeth
yielding place to new
இது பவணந்தியாரை வழிமொழியும் கூற்று.
இதன் பொருள் “”பழையன யாவும் பழுதாகிப் போயின; பயனற்றுப் போயின. எனவே அவற்றை முழுமையாகக் கழித்துவிட வேண்டும் அல்லது விலக்கிவிட வேண்டும் என்பதல்ல; ஆனாலும் புதுமைக்கு இடம் தரவேண்டும்” என்பதாகும்.
சான்றாக பழைய மருத்துவ முறைகள் யாவும் பயனற்றுப் போய்விட்டன;அதைப் போலவே பழைய கற்றல்,கற்பித்தல் முறைகள் யாவும் பயனளிப்பதில்லை என்று அவற்றைமுற்றிலுமாக ஒதுக்கிவிடுவது முடியாது. அவற்றில் புதுமைகளைப்புகுத்தி ஒரு புத்தாக்கத்தை, புரட்சியை உருவாக்க வேண்டும் என்பதேபுதியன புகுதலின் நோக்கமாகஅமைய வேண்டும். அதற்கு முதலிலேபுதுமைகளைப் புரிந்து கொள்ளுகிறஅறிவுத் திறமை வேண்டும்.
இந்தப் புதுமை பழைமையில்இருந்து எவ்வாறெல்லாம் மாறுபடுகிறது? அந்த மாற்றத்தால் விளையப்போகும் நன்மை தீமைகள் யாவைஎன்பனவற்றை ஆய்ந்தறிந்து புதுமையின் நற்கூறுகள் மட்டுமே பழைமையில் புகுவதற்கு அனுமதிக்கவேண்டும்.
இப்படிப் புதுமைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதையே நடப்பேற்றம் (அப்டேஷன்) எனக் கொள்கிறோம்.
பொதுவாகச் சமூக வழக்கில்நாமெல்லாம் அப்டேட்டாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். அதாவது மாற்றங்களை,வளர்ச்சிகளைப் புரிந்து கொண்டுஅவற்றை ஏற்றுக் கொண்டு புத்தாக்கச் சிந்தனை கொண்டவர்களாகத் திகழவேண்டும், செயல்பட வேண்டும் என்பதையே அப்டேட்டாக இருக்கவேண்டும் என்கின்றனர்.
நடப்பேற்றத்தின் அவசியம் என்ன?
நடப்பேற்றம் கொள்ள வேண்டியதுஅவசியமா? நடப்பேற்றம் கொள்ளாமல் இதுகாறும் பயன்பாட்டில்உள்ள அந்தப் பழைய படகிலேயேபயணம் செய்தால் போய்ச் சேரவேண்டிய எல்லையை எட்டாமல்போய்விடுவோமா? என்றெல்லாம் விவாதம் செய்யலாம். எல்லையை உறுதியாக எட்டவிடலாம்; ஆனால், புதுமையை ஏற்றுக் கொண்டவர்கள் நம்மை முந்திக் கொண்டு எல்லையை எட்டிவிடுவர். பின்தங்கிப் போகும் பழைமைவாதி எல்லையை எட்டி முடிப்பதற்குள் அங்கே எல்லாம் முடிந்துபோய், எதற்காகப்பயணம் செய்தோம் என்னும்நோக்கம் நிறைவேறாமல் தோல்வியிலே தான் முடியும். அதாவது ஆப÷ரசன் சக்சஸ் ஆனால் நோயாளியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற கதையாக மேற்கொண்டமுயற்சி ஏமாற்றமளிப்பதாக அமைந்துவிடும்.
எனவே ஒவ்வொரு துறையிலும் உருவாகி வரும் புதுமைகளை ஆய்ந்தறிந்து அதன் நன்மைக் கூறுகளை ஏற்றுக் கொண்டு செயல்படுபவர்களே வெற்றியாளர்களாகத் திகழ்கின்றனர்.
பொதுவாக நாம் பார்த்து வருகிற நிகழ்ச்சிதான் இது. ஒவ்வொருநாளும் மருத்துவர்களைக் காண்பதற்காக மருந்துக் கம்பெனிகளின் medical representative என்பவர் “டை’யெல்லாம்கட்டிக் கொண்டு கையில் ஒரு கருப்புலெதர் பையுடன் மருத்துவøரப் பார்க்க வருவார். நல்ல பிசியாக இருக்கும் மருத்துவர் அவருக்கு ஒரு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கி அவர் தருகிறச õம்பிள் மருந்துகளை வாங்கி வைத்துக்கொண்டு வழியனுப்பி விடுவார்.
அத்தோடு சரி. கொடுக்கப்பட்டசாம்பிள் மருந்தில் என்ன புதுமைத்தன்மை இருக்கிறது? பழைய மருந்தைவிட புதிய மருந்து எந்தவகையில் சிறப்பு வாய்ந்தது என்பனபற்றியெல்லாம் ஆய்வு செய்து மருந்தாளுமையின் உத்திகளைக்(Technology of Pharmacy) கையாண்டு இந்த சாம்பிள் எந்த வகையில் இதமானது, உயர்வானது, சிறந்தது என்பனவற்றையெல்லாம் ஆய்வுசெய்து முடிவுக்கு வரும் மருத்துவர் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களாக இருப்பர். பெருவாரியான மருத்துவர்கள் இந்த ஆய்வுப் பணிக்கு நோயாளிகளைத்தான் பலிகடா ஆக்குவர்.நோயாளிகள்தான் எலிகளைப் போல சோதனைகளுக்கு உள்ளாவார்கள்.நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் பின்னூட்டம்தான் (feed back)மருத்துவரின் ஆய்வு முடிவாக அமையும். இவ்வகைச் செயல்பாடு மருத்துவர்களால் முற்றிலும் கைவிடப்படவேண்டிய செயலாகும். ஒரு நாளில் காலையில் 50 பேர், மாலையில் 50 பேர் என நோயாளிகளைக் கண்டுவரும்மருத்துவருக்கு புதிய மருந்தின் சிறப்புத் தன்மைகளை ஆய்ந்தறிந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு நேரம் எங்கிருந்து கிடைக்கும்?
அதற்காகப் புதுமைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதும், புதுமைகளை நடைமுறையில் பின்பற்றாமல் விலகிநிற்பதும் அவரது தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.
நடப்பேற்றத்தைக் கைக்கொள்ளாத ஐம்பது, அறுபது வயதுடைய மருத்துவர்கள் இன்றைக்கு ஏதோ ஒரு மூலையில் சளி, இருமல், ஜுரம், காய்ச்சலுக்கு மட்டும் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களாக ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கப்படுகின்றனர். ஆனால் அதே வயதுடைய மருத்துவர்கள், நடப்புக்கால வளர்ச்சியை, முன்னேற்றத்தைக்கைக்கொள்வதன் மூலம் இன்றளவும் நல்ல அனுபவமிக்க மருத்துவர்களாக மதிக்கப்படுகின்றனர்.
மருத்துவத் துறை ஒன்றில் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் செயல்படுபவர்கள் வளர்ந்துவரும் முன்னேற்றத்திற்கு ஏற்பத் தம்மை நடப்பேற்றம் கொண்டவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக கல்வித் துறையில் கற்பித்தல் தொழிலில் ஈடுபடும் ஆசிரியர்கள் அவசியம் மிக மிக அவசியமாக நடப்பேற்றம் கொள்வதில் ஆர்வமுடையவர்களாக இருக்க வேண்டும்.
டார்வின் கொள்கைகள், புவியியல்கொள்கைகள், கோள்களின் அமைப்புஅவற்றின் சுழற்சி இப்படி இன்னும்பல அறிவியல் கொள்கைகளில் நிறையமாற்றம் கொண்டுள்ளன. முன்னொருகாலத்தில் பூமி தட்டையானது என்கிறகொள்கை மாற்றப்பட்டு பூமி கோளவடிவானது அதுவும் “ஆரஞ்ச்’ போலமேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் சற்றுத்தட்டையாகவும், பூமியின் நடுக்கோடு இருபத்து மூன்றரை டிகிரி சாய்ந்துள்ளது எனவும் மாறிய அறிவியல் கொள்கையினை ஏற்றுக் கொண்டுவிட்டோம். வானிலை அறிவிப்புகள், துல்லியமாகக் கணிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுகின்றன. வானிலை ஆய்வில் புதிய புதிய முன்னேற்றங்கள் உருவாகி இருப்பதை அன்றாடம் கண்டுவருகிறோம்.
மனித நாகரிகம் பற்றி வரலாற்றில் கூறப்பட்டு வந்த சரித்திரப் பதிவுகள் இன்று கீழடி ஆய்வுக்குப்பின் மாறிப்போய் விட்டன.
கற்பித்தல், கற்றல் முறையிலும்பெருத்த மாற்றங்கள் உருவாகி இருக்கின்றன. Multi Grade, Multi level(MGML) Activity based learning (ABL).Mind mapping என்றெல்லாம் கற்றல் கற்பித்தல் முறைகள் மாறியுள்ளன. இவையாவும் நடப்புக் காலத்தில் இன்னும் மாற்றம் கண்டு, எண்ணும் எழுத்தும், இல்லம்தேடிக் கல்வி என்றெல்லாம் புதுப்புது கற்பித்தல் முறைகள் புகுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதுமைகளுக்கெல்லாம்,ஆசிரியர்கள் யாவரும் தம்மைஆட்படுத்திக் கொள்கிறார்களா? 100% ஆசிரியர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு கற்பித்தல் முறையில் புதுமைகளைக் கையாளுகின்றார்களா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் மனசாட்சியுடன் ஆசிரியர்களே பதில் கூறவேண்டும்.
புதிய கற்பித்தல் உத்திகளால் பயன்விளைந்துள்ளதா என்று சர்வே செய்வதைவிட புதிய உத்திகளை அதன் உண்மைத் தன்மையோடு, புரிதலோடு, ஆர்வத்துடன் எத்தனை ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதைத்தான் முதலிலே சர்வே செய்து பார்க்க வேண்டும். அந்த கணக்கீடு (சர்வே) மிகமிகக் குறைவாக இருப்பதுதான் வருத்தமளிக்கக் கூடியசெய்தி.
இதற்காக, புதிய உத்திகளைப்புகுத்துகிற போதெல்லாம் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக அரசு இலட்சக்கணக்கில் ஆண்டுதோறும்செலவிடுகிறது. ஆனால் அதன் பயன்என்ன என்பதுதான் மில்லியன் டாலர்கேள்வியாக அமைகிறது.
இதுபோன்ற பயிற்சி வகுப்பில்கல்வித்துறையின் உயரிய நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.””பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்கப்படும் தேநீர் கேன்களை கவிழ்த்து விட்டிருந்தால் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியிருக்கும். இது தான்வெளிப்படுத்த முடியாத விளைவு. இதைத்தவிர பெரிதாக மாற்றம் எதையும் பயிற்சி வகுப்புகள் கொண்டுவரவில்லை என்பது தான் வேதனையான செய்தி” என்று அவர் அலுத்துக்கொண்டார்.
நடப்பேற்றம் (அப்டேஷன்)கொள்வதால் மட்டுமே கற்பித்தல் சிறப்படையும்; நடப்பேற்றம் கொள்ளாதவர்களின் கற்பித்தல்முறை பலனற்றது. அத்தகையோரிடம் கற்பதைவிட தாமே கற்றறிதல் சிறப்புடையதாக அமையும்.
நாமே கற்றறியலாம் நலம் பயப்பதும் அதுவே
கற்பித்தல் என்பது ஒரு வட்டத்திற்குள் அடைபட்ட தகவல்களைப்பரிமாறிக் கொள்வதாகும். ஆனால் நாமே கற்றறிதல் என்பது தரவுகளை தேடித்தேடிச் சேகரித்து அதன் விரிவான தகவல் பெருக்கத்தில் உணரப்படும் உண்மையாகும்.
ஒருமுறை ஒரு வினா தொடுக்கப்பட்டது. மாலதி என்பவர் 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஒருமணிநேரம் எடுத்துக் கொண்டார். சுந்தர் என்பவர் அதே தூரத்தைக் கடப்பதற்கு ஒன்னøர மணிநேரம் எடுத்துக் கொண்டார்.
இவர்களில் யார் வேகமானவர் மற்றும் உடல் உறுதியானவர் என்று வினா கேட்கப்பட்டது.
வந்த பதில் இதுதான், “”மாலதிதான் உடல் உறுதியானவர் மற்றும் வேகமானவர்”
இப்போது இன்னும் சில தகவல்கள் தரப்பட்டன. அதாவது மாலதி பயணித்த பாதை நன்கு பண்படுத்தப்பட்ட தார்ச்சாலையாகும். ஆனால், சுந்தர் பயணித்த பாதை கரடு முரடானது, மேலும் முட்கள் நிறைந்தது என்று கூறப்பட்டது. இப்போது யார் வேகமானவர் என்கிற வினாவிற்கான பதில் வேறுவிதமாக இருந்தது. ஆம் நிச்சயமாக சுந்தர் தான் வேகமானவர் என்பதே பதிலாக அமைந்தது.
மறுபடி இன்னும் கூடுதல் தகவல் தரப்படுகிறது. அதாவது மாலதிக்கு வயது 50; சுந்தருக்கு வயது 30.இப்போது நம்முடைய பதில் மறுபடிமாறும். இப்போது மாலதிதான் வேகமானவர் என பதில் வரும்.
மேலும் கூடுதலான தகவல் தரப்படுகிறது. அதாவது மாலதியின் உடல் எடை 60 கிலோ. ஆனால் சுந்தரின் உடல் எடை 90 கிலோ என்கிறபோது இப்போது நம்முடையபதில் வேறுவிதமாக அமையும்.
இப்படி மாலதி மற்றும் சுந்தரின் வேகத்தினை முடிவு செய்கிறபோது பெறப்படும் தகவல்களுக்கு ஏற்ப முடிவு மாறுபடுவதைக் காணமுடிகிறது.
ஆகக் கற்பித்தலுக்கு ஏற்ப, தரப்படும் தகவல்களுக்கு ஏற்பத்தான் ஒரு பிரச்சினைக்குத் தீர்வை எட்ட முடியும். பெறப்படும் அல்லது தரப்படும் தரவுகள் கற்பித்தல் முறையில் கட்டுப்படுத்தப்பட்ட அளவினதாக அமையும் .எனவே அறுதியான முடிவை எட்ட முடியாது.
ஆனால், தானே கற்றறிதலில்நம் முயற்சிக்கேற்ப பெறப்படும் தரவுகள் விரிவானதாக அமைவதால் ஒரு தரமான, முழுமையான தீர்வை எட்ட முடியும். எனவே கற்றலில் நாமே கற்றறிதலே நம்பகத்தன்மை கொண்டதாக அமையும் எனக்கொள்ளலாம்.
நடப்பேற்றம் இன்மையின் விளைவுகள்
1980களிலே நான் கணிதம் பயிற்றுவிக்கும் ஆசிரியரõக இருந்தேன். அப்போது என்னோடு ஆறுமுகநயினார் என்கிற கணித ஆசிரியரும் பணியாற்றினார். 10ஆம் வகுப்பிலே இரண்டு பிரிவுகள். ஒன்றை நானும் இன்னொன்றை அவரும் கையாண்டோம். பாடத்திட்டம், கேள்வித்தாளின் மாதிரி வடிவம், அத்தியாயம் வாரியான மதிப்பெண் பங்கீடு பற்றிப்பேசிக் கொண்டிருந்தபோது அவ/து வகுப்பிலே Set Theory – Venn Diagram போன்ற பகுதிகளை நடத்தாமலேயே விட்டுவிட்டார் என்பது தெரிய வந்தது. அந்தப் பகுதிக்கு 10 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.
நீங்கள் அந்தப் பகுதியை விட்டுவிட்டால் மீதம் 90 மதிப்பெண்களுக்குமட்டுமே மாணவன் தேர்விற்குத்தயாரõவான். மேலும் Set Theory என்பதும் Venn Diagram என்பதும் மிக எளிதானப் பகுதி. கணிதக் கொள்கையின் அடிப்படையில் அமைவது; இதற்குக் கடினமான கணக்கீடு செய்யவேண்டிய அவசியம் இல்லை; மிக எளிதாக மதிப்பெண் பெறத்தக்கப்பகுதியை விட்டுவிட்டீர்களே” என ஆதங்கப்பட்டேன்.
“”எனக்கு அந்தப் பகுதியைப் பற்றி ஒன்றும் தெரியாது. நான் பி.எஸ்.சி.படித்த போதெல்லாம் Set Theory என்பதே கிடையாது. தெரியாத ஒன்றை நான் எப்படி நடத்துவேன்”என்று விவாதம் செய்தார்.
“”நண்ப÷ர! நானும் உங்கள் காலத்தில் படித்தவன்தான் Set Theory என்பது புதிய பகுதிதான். கற்பிக்க வேண்டிய பாடத் திட்டத்தில் அப்பகுதி இருக்கிற போது அதைக்கற்றுக் கொண்டு கற்பிக்க வேண்டியது நம் கடமையல்லவா” என்று வினவியபோது அந்த அவசியம் எனக்கில்லை என்று பொறுப்பின்றி ஒதுங்கிக் கொண்டார்.
மாணவர்கள் நலன் கருதி ஒருவாரம் 8 பாடவேளைகளில் Set Theory யை அந்த வகுப்பிலே நடத்தி மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற வழிவகுத்தேன்.
என் காலத்தில் எனக்குக் கற்பிக்கப்படவில்லை. நான் எதற்கு அவற்றைக்கற்றுக் கொண்டு கற்பிக்க வேண்டும் என்கிற பொறுப்பற்ற தன்மையைப் பல ஆசிரியர்கள் கொண்டிருக்கிறார்கள்.
கற்பித்தல் ஒன்றையே நம்பியிருக்கும் மாணவர்கள் இதனால் இழப்புகளுக்கு ஆளாகின்றனர்.
நடப்பேற்றத்தைக் கைக்கொள்ளாத ஆசிரியர்கள் முனைப்பின்றி நடந்து கொண்டாலும் பரவாயில்லை,மாறாகத் தம்மைப் போல நடப்பேற்றத்தில் நாட்டம் கொள்ளாதவாறு மாணவர்களையும் ஆர்வம் குன்றச்செய்துவிடுகின்றனர்.
இன்னும் சிலர் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். எனக்கு எல்லாம் தெரியும், எனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது இந்த உலகில்,எனக்கு யாரும் கற்றுத் தரவேண்டிய தேவையுமில்லை, மேலும் நான்கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமுமில்லை என்கிற தீர்க்கமான முடிவில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் கற்பித்தல்தொழிலில் இல்லாமல் இருந்தால் பிறருக்கு ஒரு நஷ்டமுமில்லை.
அதனால் எழும் இழப்பீடுகள்யாவும் அவரையும் அவரின் குடும்பத்தையுமே சாரும். ஆனால், அவர்கற்பித்தல் செயலில் ஈடுபடுபவரõக இருந்தால் அவர் வருங்கால மாணவப்பரம்பரை பலவற்றைச் சீரழிப்பவராக அமைந்து விடுவர். இந்தச் சீரழிவு பற்றி அவர் அறியவும் மாட்டார்; தவிர்க்கவும் மாட்டார்.
ஒரு மனிதன் மருத்துவøரத் தேடி வந்தான்.
“”டாக்டர் எனக்கு ஒரு பிரச்சினை.”
“”என்ன பிரச்சினை?”
“”நான் செத்துப் போயிட்டேன்
டாக்டர்”
மருத்துவருக்குத் தூக்கி வாரிப்போட்டது. மருத்துவருக்குப் புரிந்துபோய்விட்டது. இவன் ஒரு மனப்பிரமை பிடித்தவன். இவனிடம் நயமாகப் பேசித்தான் சரிசெய்யவேண்டும் என்று முடிவு செய்துகொண்டார். பேச ஆரம்பித்தார்.
“”இங்கே பாருப்பா. நான்
நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். நீ
ஸ்டூல்ல உட்கார்ந்திருக்கே. நானும்
நீயும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
அதனால நீ சாகலே”
“”இல்ல சார் நீங்க இப்ப பேசிக்
கிட்டு இருக்கிறது என்னோட
ஆவிகிட்டே.”
மருத்துவருக்கு மேலும் அதிர்ச்சி. öரõம்பவும் வில்லங்கம்புடுச்ச ஆசாமியா இருக்கானே? என்ன செய்யலாம் என யோசித்துப் பின் பேசினார்.
“”இங்கே பாருப்பா செத்துப் போனவங்களுக்கும், உயி÷ரõட இருக்கிற
வங்களுக்கும் வித்தியாசம் இருக்குமா இருக்காதா?”
“”இருக்கும்.”
“”என்ன வித்தியாசம்?”
“”நீங்கதானே டாக்டர், நீங்கதான்
சொல்லணும்.
இவனை அறிவியல் பூர்வமாக நிரூபித்துப் புரியவைக்கலாம் என்று முடிவு செய்த மருத்துவர் மீண்டும் பேச ஆரம்பித்தார்.
“”இதோ பாருப்பா உயி÷ரõட
இருக்கிறவங்களுக்கு உடம்புல
இரத்தம் ஓடும். இறந்துபோனவங்க
உடம்புல இரத்தம் ஓடாது. சரியா?”
“”சரி டாக்டர்.”
“”சரி அதை உன்னிடத்தில் சோதித்துப் பார்க்கலாமா?”
“”பார்க்கலாம் டாக்டர்.”
இப்போது மருத்துவர் சற்று உற்சாகமானார். அவனுடைய ஒரு
விரலைப் பிடித்தார், ஸ்பிரிட்டால் துடைத்தார், ஓர் ஊசியைக் கொண்டு
மெதுவாகக் குத்தினார் ரத்தம் வந்தது.மகிழ்ச்சியடைந்தார் மருத்துவர்.
“”பார்த்தாயா. இரத்தம் வந்திடுச்சு.”
“”ஆமாம் வந்திடுச்சு.”
“”என்ன நினைக்கிறே என்னப்பத்தி.”
“”நீங்க ஒரு திறமையான டாக்டர்தான்.”
“”ஹி… ஹி… எதனால அப்படிச்சொல்றே?”
“”செத்துப்போன உடம்புல இருந்து இரத்தம் வரவழைச்சுட்டீங்களே.”
மருத்துவருக்கு அதிர்ச்சிக்கு மேல்அதிர்ச்சி. தாங்க முடியாமல் மயங்கிச்சரிந்தார்.
மயங்கிச் சரிந்த மருத்துவர் முகத்தில்தண்ணீர் தெளித்து, ஆசுவாசப்படுத்திஎழுப்பி அமரச் செய்தனர். மயக்கத்தில்இருந்து மீண்டெழுந்த மருத்துவருக்குஎன்ன நடந்தது என்று சற்று நேரம்புரியவே இல்லை. சிறிது நேரத்திற்குப்பிறகு மருத்துவருக்கு நடந்து முடிந்தநிகழ்ச்சி புரியத் தொடங்கியது.
சரி பரவாயில்லை. வந்திருப்பவனின் மனப்பிரமையை எப்படியாவதுசரிசெய்ய வேண்டுமே. என்னசெய்யலாம் என யோசிக்கத் தொடங்கினார்.
ஒருமுறை ஒருவன் பூனையைவிழுங்கிவிட்டதாகவும், அது அவன்வயிற்றில் மியாவ், மியாவ் என்றுகத்திக் கொண்டே இருப்பதாகவும்மனப்பிரமையோடு மருத்துவரிடம்வந்தானாம். மருத்துவரும் அவனுக்குஇருப்பது மனப்பிரமை என்பதைப்புரிந்து கொண்டு ஒரு மாற்று உத்தியைக் கையாண்டாரõம். நோயாளியை மயக்கமடையச் செய்துவிட்டு,வெளியில சுற்றித்திரிந்த பூனைக்குட்டியைப் பிடித்து வந்துவைத்துக் கொண்டாரõம். நோயாளிமயக்கமடைந்து எழுந்தபின், இதோபார் உன் வயிற்றுக்குள் இருந்துகொண்டு தொந்தரவு செய்த பூனைக்குட்டியை வெளியே எடுத்துவிட்டேன் என்று, தான் தெருவில் இருந்துபிடித்த வந்தப் பூனைக்குட்டியைக்காட்டினாராம். பிடித்திருந்த காதைவிட்டவுடன் மியாவ் மியாவ் என்றுகத்திக் கொண்டு அந்தப் பூனைக்குட்டி ஓடிப்போனதாம். நோயாளியும் மனப்பிரமை நீங்கி மகிழ்ந்து போனானாம்.
இந்தக் கதை நம் மருத்துவருக்குஞாபகத்தில் வந்தது. சரி இதன்படியே செயல்படுவோம் என எண்ணிப் பேசத்தொடங்கினார்.
“”ஆமாம் நீ எதைக் கருத்துல வச்சு செத்துப் போயிட்டேன்னு
சொல்றே”
“”என் உயிர் போடுச்சு டாக்டர்.
இப்ப நான் ஆவியா அலைஞ்சிக்கிட்டு இருக்கேன். என் உடம்புல இப்ப உயிர்
இல்ல டாக்டர்.”
“”ஓ அப்படியா! அப்ப ஒரு உயிர உன் உடம்புல செலுத்திட்டா நீ பொழைச்
சுக்குவே அப்படித்தானே.”
“”ஆமாம் டாக்டர், என் ஆவி உடம்புல உயிரைச் செலுத்துங்க
டாக்டர்.”
“”சரி செய்கிறேன்… அப்படியே படுத்துத் தூங்கு” இவ்வாறு கூறிவிட்டு
மருத்துவர் இன்னொரு அறையில்மருத்துவமனையில் பணியாற்றும்பணியாளர் ஒருவரைப் பிடித்து, நடத்தப்போகும் நாடகத்திற்குத்துணைபுரிய வேண்டினார். அந்தப்பணியாளர் எப்படியெல்லாம் நடிக்கவேண்டும் என்பதையும் சொல்லி நாடகத்தை அரங்கேற்ற ஏற்பாடுகள் செய்தார்.
ஒரு தனிமையான இருட்டறையில் நோயாளியையும், பணியாளரையும் அருகருகே படுக்கவைத்து டிரிப்ஸ் ஏற்றுவதற்குப் பயன்படும் டியூப்களைக் கொண்டு இருவர் உடம்புக்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்கிலேசான மயக்க நிலையை உருவாக்க இருவருக்கும் “செடேசன்’ மருந்துகளை செலுத்திவிட்டு அறையில் அமைதி நிலவச் செய்தார். மிக மெதுவான குரலில் மருத்துவர் தியான மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்தார்.
“”இதோ இந்தப் பணியாளரின் உயிர் மெல்ல… மெல்ல… இந்தநோயாளியின் உடலுக்குள் மாறிக்கொண்டிருக்கிறது.”
“”இதோ இந்தப் பணியாளரின் உயிர் மெல்ல மெல்ல… நோயாளியின் உடலில் ஊடுறுவிக் கொண்டிருக்கிறது…”
இவ்வாறாக அரைமணி நேரம் நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது.
எல்லாம் முடிந்தபிறகு… அறை ஒளியூட்டப்பட்டது. மருத்து மனைப்பணியாளர் ஏற்கனவே சொல்லி வைத்தபடி சற்றுக் கூடுதலான மயக்க மருந்தால் தூங்கிக் கொண்டிருந்தார்.
“”தம்பி… தம்பி… நீங்க எழுந்திருங்க. இப்ப உங்களுக்கு உயிர் வந்திடுச்சு .நீங்க பொழச்சுக்கிட்டீங்க. நீங்க இப்ப பொழச்சுக்கிட்டீங்க. இந்தப்பணியாளரின் உயிர் உங்கள் உடம்பில் புகுந்துவிட்டது.”
“”ஆமாம் டாக்டர் நான் இப்பப்
பொழச்சுக்கிட்டேன். இப்ப நான்
உயி÷ரோட இருக்கேன். இப்ப நான்
உயிரோட இருக்கேன்”
நோயாளி மகிழ்ச்சியாக உலாவத் தொடங்கினார்.
இங்கே நான் கூறுவது ஒரு கதையாக இருக்கலாம். ஆனால், உண்மையில் பிரம்மையும், பிடிவாதமும் பிடித்த மனநோயாளிகள் பலர் இருக்கிறார்கள். அதோடு ஈகோ மனப்பான்மையும் சேர்ந்துவிட்டால், நடப்பேற்றம் கொள்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் கற்பிக்கும் தொழிலைக் கையாள்பவராக இருக்கும்பட்சத்தில் அவர்களின் மனப்பிரம்மையை நீக்குகிற வகையில் ஏதேனும் உத்திகளைக் கையாண்டு அவர்களை நடப்பேற்றம் (அப்டேஷன்) கொள்ளச் செய்தல் வேண்டும்.அதனால் ஒரு சமுதாயச் சீரழிவு நிகழாவண்ணம் தடுக்க முடியும்.
அன்றாடம் மாறிவரும் உலகியல் நடப்பிற்கு ஏற்ப, நம்மை நாம் நடப்பேற்றம் கொண்டவர்களாகமாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு சைபர் கிரைம் ஏமாற்று வேலைகளில் நாளும் ஒவ்வொரு ஏமாற்று வித்தையை நடைமுறையில் கண்டுவருகிறோம். நினைத்துக்கூடபார்க்க முடியாத வித்தைகளைக்கையாண்டு கடத்தல் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.ஒருவனை எளிதாக ஏமாற்ற வேண்டுமா? அவன் ஆசையைத் தூண்டு.வேறெங்கும் சென்று ஏமாற வேண்டாம் எங்களிடம் வாருங்கள் என்கிறஏமாற்று விம்பரங்கள். சிறுசேமிப்பு,அதிக வட்டி, ஒன்று வாங்கினால்ஒன்று இலவசம், இப்படியெல்லாம்…எத்தனைவிதமாக ஏமாற்றுகிறார்கள்.
இந்த ஏமாற்று வித்தைகளைப் பற்றித்தெரியாதவர்கள்தான் தொடர்ந்துஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.ஏமாறாமல் இருக்க வேண்டுமானால் உலகியல் நடப்புகள் பற்றிய நடப்பேற்றத்தை நாம் நாளும் கைக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் நடப்பேற்றம் பெற்றால் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் மட்டுமேபயன்பெறுவர்.
ஆனால், ஒரு ஆசிரியர் நடப்பேற்றம் கொண்டால் ஒரு வகுப்பேபயன்பெறும்; ஒரு சமூகமே பயன்பெறும், அந்த நாடே பயன்பெறும்.எனவே நடப்பேற்றம் கொள்ளவேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை.
நடப்பேற்றம் கொண்டு புதியனவற்றைக் கற்றறிதலே அறிவுப் பெருக்கத்திற்கு உகந்தது; உயர்ந்தது.
கற்றறியலாம் நாமே!
No comments yet.