ஆஸ்கர் வென்ற உதகைப் பெண் – The Elephant Whisperers

Home/Articles/அறிந்துகொள்ளலாமே/ஆஸ்கர் வென்ற உதகைப் பெண் – The Elephant Whisperers

The Elephant Whisperers

சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸை’ இயக்கியவர் உதகையைச் சேர்ந்த கார்த்திகி கோன்சல்வாஸ்.

முதுமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயைப் பிரிந்த ரகு என்ற யானையைப் பற்றியும், அதனை வளர்த்து பராமரித்த பொம்மன் பெல்லி பற்றியும் உருவான ஆவணக் குறும்படம்தான் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்.

ஆஸ்கர் விழாவில் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்துக்காக இயக்குநர் கார்த்திகி மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்க ஆகியோர் விருதை பெற்றனர்.

இந்நிலையில், இந்த ஆவணப்படம் பற்றியும் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் பற்றியும் எழுத்தாளர் அஜயன் பாலா முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

“”உதகைப் பெண் கார்த்திகி கோன்சால்வ்ஸ் எடுத்த ஆவணக்குறும்படம் ஆஸ்கர் வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இரண்டாவது ஆஸ்கர் தருணம். உடன் தயாரிப்பாளர் குனீத் மோங்கவுக்கும் விருது பகிμப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே “கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர்’, ‘லஞ்ச் பாக்ஸ்’ போன்ற படங்களை தயாரித்தவர்.

“தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ வெறும் யானையைப் பற்றிய படமல்ல. பொம்மன் பெல்லி என்ற காட்டு நாயக்க சமூகத்தைச் சேர்ந்த தம்பதியின் வாழ்வியலை சொல்லும் படம். பெல்லியின் அப்பா புலியால் தாக்கப்பட்டு உயிரிழக்க, அவரது மகளையும் சிறுவயதிலேயே இழக்கிறார்.

இந்தச் சூழலில் தாயைப் பிரிந்த ரகு என்ற யானையை பராமரிக்க நேரிடுகிறது. அந்தக் குட்டி யானையை தங்களின் சொந்த பிள்ளையை போல வளர்க்கின்றனர் பெல்லி தம்பதி. இவர்களுக்கும் ரகுவுக்கும் இருக்கும் உறவுதான் இந்த ஆவணப்படத்தின் பெரும்பாலான காட்சிகள். குட்டி யானை அவர்கள் மீது காட்டும் பாசமிக்கக் கட்சிகள் நெகிழவைக்கக் கூடியது. ஒரு கட்டத்தில் வனத்துறையினர் அந்த குட்டி யானையைப் பராமரிக்க வேறு ஆள்களிடம் ஒப்படைக்கப்போவதாக சொல்ல, அவர்களால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆஸ்கர் வென்ற தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் இந்திய ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஊட்டியை சேர்ந்தவர். கோவை தனியார் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் படித்தவர். நான் இரண்டுமுறை அங்குச் சென்று சிறப்பு வகுப்புகள் எடுத்திருக்கிறேன் என்பதன் மூலம் அந்தக் கல்லூரியின் பெருமைமிக்க சுவற்றில் நானும் கொஞ்சம் உரசி கொள்ள ஒரு வாய்ப்பு.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ஆவணப் படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.

Loading

No comments yet.

Leave a comment