உத்தமத் தலைமைக்கு உதவும் பத்து “உ’க்கள்

Home/Articles/அறிந்துகொள்ளலாமே/உத்தமத் தலைமைக்கு உதவும் பத்து “உ’க்கள்

உத்தமத் தலைமைக்கு உதவும் பத்து ``உ'க்கள்

Ten u for effective leadership

  1. உதிர்த்தல்
  2. உற்று நோக்கல், உசவுதல்
  3. உள்வாங்கிக் கொள்ளுதல்
  4. உறுநூல் பல கற்றல்
  5. உணர்ந்து அறிதல் உறவு பேணல்
  6. உருவாக்குதல் (நேரத்தை, திட்டத்தை)
  7. உழைத்தல்
  8. உட்படுதல்
  9. உண்மையாய் இருத்தல்
  10. உதாரணமாய் இருத்தல்

உதிர்த்தல்

எனக்கு எல்லாம் தெரியும் என்கிற ஈகோ, தற்பெருமை, காழ்ப்புறுதல், கோபம் கொள்ளுதல், எளியோரை ஏளனம்செய்தல் ஆகியவற்றை உதிர்த்தல் வேண்டும்; அவற்றைக் களைதல் வேண்டும்.

உற்று நோக்கல், உசவுதல்

எல்லாவற்றையும் உற்றுநோக்குங்கள். ஏன், எதற்கு, எப்படி? என்று எல்லாவற்றிலும் உசவுங்கள். அறிவுப் பெருக்கத்திற்கு இதுவே வழிவகுக்கும்.

உள்வாங்கிக் கொள்ளுதல்

பார்த்தல், படித்தல், கேட்டல், கற்றல், பயிலுதல் என்கிற நிலைகளில் உள்வாங்கிக் கொள்ளும் திறன் நூறு சதவீதம் அளவினதாக இருக்க வேண்டும்.

உறுநூல் பல கற்றல்

கற்றனைத்தூறும் அறிவு என்பார் பொய்யாமொழியார். கேட்பது, பார்ப்பதை விட நூல்களைக் கற்பதால் மட்டுமே முழுமை அறிவு கிட்டும். முடிந்த மட்டும் அளவற்ற நூல்களைப் படிப்பது அறிவு, வெள்ளத்தனைய மலர் நீட்டம் போல் கற்றதனையது நம் உயர்வு.

உணர்ந்து அறிதல் உறவு பேணல்

அனுபவமே உணர்தல் ஆகும். சித்தாந்தம் ஒன்றினைப் படித்துப் புரிந்து கொள்வதற்கும், (theory) செயல்முறையால் (practical) புரிந்து கொள்வதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. செயல்முறையால் புரிதலே உணர்தல் ஆகும். ஒன்றை உணர , நம் மனம் இலகுத்தன்மை கொண்டதாகவும் திறந்த நிலையில் இருப்பதும் (flexible and open) அவசியமானதாகும். பிறரிடம் அன்பு காட்டுங்கள்; அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்; பழகுவதில் எளிமையைக்கையாளுங்கள்; அணுகுதலை எளிதாக்குங்கள். உதட்டாலும்உள்ளத்தாலும் ஒன்றையே வெளிப்படுத்துங்கள். இவற்றோடு உணர்தலும் உறவுப் பிμச்சனைகளுக்குவிடைகளைக் காண உதவும்.

உருவாக்குதல் (நேரத்தை, திட்டத்தை)

எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரம்தான். சாதாரணமானவர்கள் நேரம் போதவில்லை என்கின்றனர். சாதனையாளர்கள் நேரத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.இருக்கிற 24 மணி நேரத்தை 30 அல்லது 36 மணிகளாக பெருக்கிக் கொள்கின்றனர். அது எப்படி? இப்படித்தான். தொடர்ந்து வருவனவற்றைப் படியுங்கள். அதிகாலையில் எழுங்கள் சோர் வடையாது இருங்கள். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளைச் செய்யப் பழகுங்கள்; முயற்சி செய்யுங்கள். தகுந்த முன்னேற்பாடு மற்றும் திட்டமிடுதலை மேற்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே செய்யாமல் மற்றவருக்குப் பகிர்ந்து வழிமுறைகளை விளக்கிக் கூறுங்கள். தேவை, தேவையில்லை என வேலைகளைப் பிரித்து அறியுங்கள். வேலைகளை விரைந்து முடிப்பதற்கான உத்திகளை கையாளுங்கள். இப்படி இன்ன பிற படிநிலைகள் உங்களுக்கு நேரத்தை கூட்டிக் கொடுக்கும்.plan of action, proper planning என்பன நேர விரையத்தை கட்டுப்படுத்தும். காலத்தின் அருமை கருதுங்கள், காரியத்தின் முக்கியத்துவம் உணருங்கள்.

உழைத்தல்

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும். உழைப்பே உயர்வுக்கு ஆணிவேர். மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண்துஞ்சார், எவ்வெவ்வர் தீமையும் மேற்கொள்ளார், செவ்வி அருமையும் பாரார், அவமதிப்பு கொள்ளார், கருமமே கண்ணாயினார் நீதிநெறி விளக்கத்தின் இச்செயலை மூலமந்திரமாகக் கொள்ளுங்கள். உங்களின் ஒவ்வொருநிமிட உழைப்பும் சாதனையை நோக்கி நகரட்டும். never before, never after என்பது உங்களின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கட்டும்.

உட்படுதல்

பழையன கழிதலும் புதியன புகுதலும் அன்றாட அதிவேக நிகழ்வுகள் ஆகிவிட்ட இன்றைய நாளில் இந்தப் புதுமைகளை ஏற்றுக் கொள்பவரால் மட்டுமே வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். எப்பணியில் ஈடுபட்டவராயினும் அவர் அப்படியே நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தம்மை உட்படுத்திக் கொள்ளவில்லை என்றால் இருந்த இடம் தெரியாமல் காணாது போய்விடுவார். எண்ணும் எழுத்தும் அறியாதவன், படிப்பறிவு இல்லாதவன் என்கிற காலம் போய், கணினியும், மௌசும் அறியாதவன், electronic illiterate என்று கருதும் காலம் வந்துவிட்டது. Try to keep yourself always updated புதுமைக்கு உட்படாதவர் யாவரும் உடன்பட்டு (உடனே காய்தல்) போய் விடுவார். வளர்ந்து வரும் புதுமைகளை எல்லாம் உட்படுத்திக் கொள்ளுங்கள்.

உண்மையாய் இருத்தல்

பிறருடைய நம்பகத்தன்மைக்கு உங்களைப் பாத்திμமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பகத் தன்மை தான், உங்கள் பின்னால் தொண்டர்கள் கூட்டத்தைத் தொடர செய்யும். உங்கள் பொறுப்பில் இருக்கும் பள்ளிக்கும், உடன் பணியாற்று வோருக்கும், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் உண்மையானவர்களாக இருங்கள். யாவருக்கும் உண்மையாய் இருங்கள்; மென்மையாய் இருங்கள்; மேன்மையைப்பெறுங்கள்.

உதாரணமாய் இருத்தல்

உங்களை நோக்குகிற ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமானவராக காட்சி தாருங்கள். set yourself an example in all walks of your life; Be first among the equal நீங்கள் பணியாற்றுகிற இடம், இறைவன் உங்களை ஏற்றி வைத்திருக்கும் தளம். அந்தத் தளத்தில் சாதனைகளை விளையச் செய்யுங்கள். விளைச்சல்கள் வெளிச்சங்கள் ஆகும். அந்த வெளிச்சத்தில் நீங்கள் அடையாளம் காணப்படுவீர்கள். Making different things maybe better but making things differently is the best இன்றைக்கு எத்தனையோ பேரை நாம் உதாரணப் புருஷர்களாக கோடிட்டுக் காட்டுகிறோம். அத்தகைய உதாரணப் புருஷர்களுள் ஒருவராக உங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள். இறந்தும் வாழ்பவர் எவர் என்றால், அவர்கள் எல்லாம் வாழ்ந்த போது உதாரணப் புருஷர்களாக வாழ்ந்தவர்களே. முடியுமா என்பது அவநம்பிக்கை. என்னால் அன்றி பின் எவரால் முடியும் என்பது தன்னம்பிக்கை. முயல் ஆமையால் தோற்கவில்லை; முயலாமையால் தோற்றது என்பதை உணருங்கள். அருவினை என்ப உளவோ, கருவிலான்காலம் அறிந்து செயின். குறள் 483 என்று செய்து காட்டியதால் தான் வள்ளுவன் இன்றும் நம்மில் உதாரணப் புருஷனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். Nothing is impossible, The word impossible itself, implies to impossible, (I am impossible)

Loading

No comments yet.

Leave a comment